வாடகை வீடு.. "முஸ்லிம்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது".. சொன்னது யார் பாருங்க.. போலீஸ் அதிரடி.. சபாஷ்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் திடீர் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.. எனினும், போலீசார் உடனடியாக வந்து நிலைமையை சீர்செய்ததால், பதற்றம் எதுவும் நடக்காமல் தடுக்கப்பட்டுவிட்டது.
தான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே, தனக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்பட்டதாக பெங்களூரை சேர்ந்த ஹைஃபா என்ற இளம்பெண், 2 வருடங்களுக்கு முன்பு ட்விட்டரில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.
பெங்களூர் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார் ஹைஃபா... எத்தனையோ புரோக்கர்களை தொடர்பு கொண்டு, வீடு வேண்டும் என்று கேட்டுள்ளார்.. அதில் ஒரு புரோக்கர் நம்பரின் வாட்ஸ்அப் நம்பரை பெற்று வாடகைக்கு வீடு ஒன்று இருக்கிறதா என்று கேட்டுள்ளார்..

ட்வீட்: உடனே புரோக்கர், "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு இவர் "ஹைஃபா" என்று சொல்லவும், "நீங்கள் இந்துவா?" என புரோக்கர் கேட்டுள்ளார்..
உடனே அதனை மறுத்த ஹைஃபா,.. "இல்லை, நான் இந்து இல்லை.. அதில் ஏதேனும் உங்களுக்கு பிரச்சனையா?" என்று திருப்பி கேட்டிருக்கிறார். அதற்கு அந்த புரோக்கர், "வீடு என்னமோ காலியாகத்தான் இருக்கு.. ஆனால் அதன் ஓனர், இந்து குடும்பத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்" என்று சொன்னாராம் ..

வாடகைக்கு வீடு: தான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே, தனக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்பட்டது என்று ஹைஃபா தன்னுடைய ட்விட்டரில் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.. இந்த பதிவை எப்போது பதிவிட்டார் தெரியுமா? இந்த நாட்டின் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த, ஆகஸ்ட் 15-ம் தேதி பதிவிட்டிருந்தார்.
ஹைஃபா பதிவிட்டிருந்த அந்த ட்வீட், மிகப்பெரிய விவாதப்பொருளாக அன்று மாறியிருந்தது.. இணையவாசிகள் திரண்டு வந்து ஹைஃபாவுக்கு ஆறுதல் சொன்னார்கள்..
இந்தியர்கள்: "எல்லாரும் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றி வைத்து என்ன பலன்? இந்த கொடி நம் அனைவரையும் இந்தியர்களாக கம்பீரம் கொள்ள செய்கிறது என்பதைதானே உணர வேண்டும்? நீங்கள் இப்படிப்பட்ட செயலுக்கு ஆளாக நேரிட்டதற்கு வருந்துகிறோம்.. இந்த கடினமான சம்பவத்தை நீங்கள் கடந்து செல்லுங்கள்" என்று ஹைஃபாவுக்கு ஆறுதல் தந்தார்கள்.
ஆனால், மேலும் சிலரோ, "வீட்டு ஓனர்கள் அவர்களது, சம்பிரதாயங்களை, விருப்பங்களை சொல்கிறார்கள், இதில் ஒன்றும் தவறில்லையே? நமக்கு பிடிக்காவிட்டால், விலகிவிட வேண்டியதுதானே" என்று மாற்றுக்கருத்தையும் முன்வைத்திருந்தனர்.

இணையவாசிகள்: எனினும் பெரும்பாலான இணையவாசிகள், "இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.. அதற்கான புதிய தொடக்கத்தை உடனடியாக தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டிருந்தனர். 2 வருடங்கள் முன்பு இந்த ட்வீட்டும், அதன்மூலம் நடந்த விவாதங்க்ளும் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தன.
எனினும், இதே நிலைமைதான் இன்றும் சில இடங்களில் நீடிப்பதாக தெரிகிறது. இதோ ஜெய்ப்பூரில் நடந்த சம்பவம், லேசான பரபரப்பை தந்துவிட்டது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நந்தபுரி காலணி உள்ளது.. இங்குள்ள பல வீடுகளுக்கு வெளியே முஸ்லிம்களுக்கு சொத்துக்களை வாடகைக்கு விடவோ அல்லது விற்கவோ கூடாது என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவிட்டன.. முஸ்லிம் ஜிஹாத்துக்களுக்கு எதிராக இந்துக்கள் ஒன்று பட வேண்டும் என்ற அந்த போஸ்டர்கள், அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது.
நந்தபுரி காலனி அமைந்துள்ள 22வது வார்டு பாஜக கவுன்சிலர் அனிதா ஜெயின் தூண்டுதலால், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக கூறப்பட்டது. . "இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முஸ்லிம் மக்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அனிதாவும் தெரித்துள்ளார்.
போஸ்டர்கள்: இப்படி ஒரு போஸ்டர் ஒட்டியதுமே, அந்த பகுதியிலிருந்த முஸ்லிம்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.. அதற்குள் தகவலறிந்து வந்த போலீசார், அவர்களது வீட்டுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை உடனடியாக அகற்றினார்கள்..
மேலும், அந்த பகுதியில் அமைதி மற்றும் அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என்றும் போலீஸார் அறிவுறுத்திவிட்டு சென்றார்கள். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications