"மாமியார்".. இப்படிக்கூட நடக்குமா.. "இயற்கைக்கு மாறான உறவு"..போலீசுக்கு ஒரே ஓட்டம்.. கண்ணீர் பெண்கள்
கான்பூர்: நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. அதிலும் வடமாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகின்றன..!!
சில மாதங்களுக்கு முன்பு, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அந்த பகீர் சம்பவம் நடந்தது.. 25 வயதான பெண்ணுக்கு, தொழுதூரைச் சேர்ந்த 37 வயதான நபருடன் திருமணம் நடந்துள்ளது.. திருமணத்தன்று, தம்பதிகள் இருவரும் தனிமையில் இருந்தபோது, திடீரென அந்த பெண் அலறி கத்தியுள்ளார்..
ஆரம்பத்தில் அந்த பெண் சத்தம்போடும்போது, குடும்பத்தினர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. தொடர்ச்சியாக அலறல் சத்தம் கேட்கவும்தான், அந்த ரூமுக்கு ஓடிச்சென்று கதவை தட்டியிருக்கிறார்கள்.. கதவை பலமாக தட்டவும், பயந்துபோன மாப்பிள்ளை, வேறு வழியின்றி கதவை திறந்ததுடன், கதவை திறந்த வேகத்திலேயே, அங்கிருந்து வெளியே ஓடினார்..

மணப்பெண் அலறல்: அப்படி ஓடும்போது, "ஐயோ.. அது பெண்ணே அல்ல... திருநங்கை" என்று சத்தமிட்டு கொண்டே ஓடினாராம்.. ரூமில் சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கீழே மயங்கி விழுந்து கிடந்தார் கல்யாண பெண்.. பிறுகு மறுநாளே மாப்பிள்ளை சிக்கினார்.. இயற்கைக்கு மாறான உறவுக்கு, மணப்பெண்ணை கட்டாயப்படுத்தியதுடன், சரமாரி தாக்கியிருக்கிறார்.. அத்துடன், பெண்ணின் உடம்பெல்லாம் பலஇடங்களில் கடித்து கடித்து வைத்திருப்பது நிரூபணமானது.. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
சில நாட்களுக்குமுன்புகூட இதுபோலவே ஒரு சம்பவம் நடந்தது.. கோவையை சேர்ந்தவர் அந்த பெண். 25 வயதாகிறது.. பிடெக். பட்டதாரியும்கூட.. கஞ்சா போதையில் இயற்கைக்கு மாறான வகையில், கணவரிடம் செக்ஸ் சித்ரவதைக்கு ஆளாகி உள்ளார்.. வயாகரா மாத்திரையை அதிகமாக உட்கொண்டு, இதன்காரணமாகவும் பெண்ணுக்கு சித்ரவதை நீண்டுவந்துள்ளது..
முரணான உறவு: அத்துடன், தன் நண்பருடனும் சேர்ந்து 3 பேராக உறவு கொள்ள வேண்டும் என்றும் மனைவியை வற்புறுத்தினாராம் அந்த கணவர்... இதெல்லாம் பார்த்து அதிர்ந்து போன அப்பெண், போலீசுக்கு ஓடியுள்ளார்.. கோவை மாநகர கிழக்கு பெண் போலீசாரிடம், புகாரை தந்ததுடன், செய்தியாளர்களிடம் பேசும்போதும் கண்ணீர்விட்டு அழுதார்.
இப்படி, இயற்கைக்கு முரணான உறவுமுறை சம்பந்தமாக பல பெண்கள் துயரங்களை அனுபவித்து வரும்நிலையில், இன்னொரு இளம்பெண்ணும் பரிதாபத்துக்கு ஆளாகி உள்ளார்.. உத்தரபிரதேம் கோஞ்ச் ஜலான் பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. புதிதாக திருமணமானவர்.. 24 வயதுதான் ஆகிறது.. திருமணத்திற்காக தங்கம், வெள்ளி, பொருட்கள் உட்பட 15 லட்ச ரூபாய் வரதட்சணையாக தந்துள்ளனர்.. இருந்தாலும் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வேண்டும் என்று மாப்பிள்ளை, தன் மனைவியிடம் வீட்டில் தொந்தரவு தந்துள்ளனர்.. இதைதவிர, ஒரு கார் வேண்டும் என்றும் மாப்பிள்ளை வரதட்சணையாக கேட்டுள்ளார்..

மாமியார் டார்ச்சர்: மாமியாரும் இந்த விவகாரத்தில் சேர்ந்துகொண்டு, மருமகளை துன்புறுத்தியிருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட பெண் இந்த கோரிக்கைகளுக்கெல்லாம் இணங்க மறுத்தார்.. தன் குடும்ப சூழலை எவ்வளவோ எடுத்து சொல்லியும், வரதட்சணை விஷயத்தில் மாமியார் வீட்டில் கறாராக இருந்தனர்.. இதனால் மனைவியை சம்மதிக்க வைக்க, அவருடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் கணவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் இறுதியில் வீட்டை விட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனால் பொறுமையிழந்த அந்த பெண், குவாலியர் மகளிர் போலீசுக்கு சென்றுவிட்டார்.. வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறான உறவு டார்ச்சர் என அனைத்தையுமே புகாரில் கூறினார்.. அதுமட்டுமல்ல, தனியாக இருக்கும்போதெல்லாம் மாமனார் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் அந்த பெண் புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
போலீஸ் நம்பிக்கை: இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.. இதுகுறித்து அவர்கள் சொல்லும்போது, இந்த குற்றச்சாட்டுகளை மாப்பிள்ளை தரப்பினர் மறுக்கிறார்கள்.. ஆனால், பெண்ணின் பெற்றோர், மருமகனுக்கு பலமுறை அறிவுரை சொல்லி திருத்த முயற்சித்திருக்கிறார்கள்.. அப்போதும் அவர் தன் பிடிவாதத்தை மாற்றி கொள்ளாமல் தாக்கியிருக்கிறார்.. விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications