ஓவர் வெறித்தனம்.. மனைவி மீது பாய்ந்த கணவர்.. "மூக்கு" கையோடு வந்துருச்சு.. அப்பறம் என்னாச்சு பாருங்க
கான்பூர்: மனைவியின் மூக்கை கடித்து துப்பிவிட்டாராம் கணவர்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை, மகேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் நஜீம்... இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் அஜ்மி.. 22 வயதாகிறது.. இவர்களுக்கு கல்யாணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. தற்போது, 5 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இவர்களுக்கு இருக்கிறது.

கல்யாணம்: இந்த கல்யாணத்திற்கு நஜீம் குடும்பத்தில் வரதட்சணை கேட்டதாக தெரிகிறது.. அந்த வரதட்சணை தருவதாக சொல்லித்தான், அஜ்மி குடும்பத்திலும் உறுதி தந்துள்ளார்கள்.. ஆனால், மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சணையை, அஜ்மி குடும்பத்தினரால் போடமுடியவில்லை.. அதனால், கொஞ்சம் கொஞ்சம் வரதட்சணை தந்துவிடுவதாக சொல்லி உள்ளார்கள்.
எனினும், தாங்கள் கேட்டதுமே வரதட்சணையை தராமல் போனதால், கல்யாணம் ஆனதில் இருந்தே, அஜ்மியை துன்புறுத்த துவங்கியிருக்கிறார்கள் நஜீம் குடும்பத்தினர்.. தன் குடும்பத்தின் இயலாமையை எடுத்து சொல்லியும் மாமியார் வீட்டில் காதுகொடுத்து கேட்கவில்லையாம்..
அடித்து தாக்கினார்: ஒருகட்டத்தில், வரதட்சணை வாங்கிவரும்படி, அஜ்மியை அடித்து தாக்கியிருக்கிறார்கள்.. இதனால், வலி பொறுக்க முடியாத அஜ்மி, வரதட்சணை கொடுமை தொடர்பாக போலீசில் புகார் தரப்போவதாக சொல்லி, வீட்டை விட்டு கிளம்புவாராம்.
ஆனால், ஒவ்வொரு முறை இப்படியும் போலீஸாரிடம் சொல்வதற்காக அஜ்மி புறப்பட்டு செல்லும்போதெல்லாம், அந்த ஊர் பெரியவர்கள் அஜ்மியை மடக்கி பிடித்துவிடுவார்களாம்.. போலீசுக்கு போகக்கூடாது, எதுவானாலும், ஊர் பஞ்சாயத்தில்தான், பிரச்சினைகளை பேசி தீர்வு காண வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்களாம்.. அத்துடன், வரதட்சணை விவகாரம் குறித்து பஞ்சாயத்தில் பேசி, அஜ்மியை சமாதானம் செய்வார்களாம்.
மதுபோதை: இந்த சூழலில், 2 நாளைக்கு முன்பு, வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்துள்ளார் நஜீம்.. வழக்கம்போல், வரதட்சணை பிரச்சனையை கிளப்பியுள்ளார்.. வழக்கம்போல், அஜ்மியை அடித்து தாக்கி உள்ளார்.
"நான் கேட்ட வரதட்சணையைகூட தர முடியாத உனக்கு மூக்கு எதுக்கு?" என்று கேட்டு, பாய்ந்து சென்று, சென்று அஜ்மியின் மூக்கை லபக்கென கடித்துவிட்டாராம் நஜீம்.. வெறித்தனமாக கடித்ததில், அஜ்மி மூக்கின் நுனியை, தனியாக கடித்து எடுத்து, துப்பினார்.. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார் அஜ்மி..
புகார்: வழியும் ரத்தத்துடன், அப்படியே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிசென்றார்.. இந்த முறை அஜ்மியை, அங்கிருந்த யாராலுமே தடுக்க முடியவில்லை.. போலீசில் கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் தந்தார்..
"கடந்த 15 ம்தேதி வரதட்சணை கொடுக்கவில்லை என்று, என்னை எனது மாமியார் அடித்தார்.. பலமுறை என்னை வீட்டை விட்டு துரத்தினார்.. எப்போதெல்லாம் அவர்கள் துன்புறுத்துகிறார்களோ அப்போது ஊர் பஞ்சாயத்தை கூட்டி சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதே வரதட்சணையை கேட்டு கணவர் என்னுடைய மூக்கை கடித்து துப்பிவிட்டார்.. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கணவர் குடும்பத்தில் உள்ள 6 பேர் மீது புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், கணவன் நஜீம் மற்றும் அவரது அப்பா சபீர், குடும்ப உறுப்பினர்களான ரிஹான், ருக்ஷார், மஜித் உசைன் மற்றும் சாஹித் அஹமத் உள்ளிட்ட 6 பேரை கைது செய்திருக்கிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications