"அசைன்மென்ட்" கொடுத்து தினகரனை வெளியில் விட்டுள்ளார்களாமே.. பரபர தகவல்கள்!
டெல்லி: ஒரு முக்கியமான வேலை தொடர்பாகவே பாஜகவின் ஆசியால் தினகரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
தினகரனை வெளியில் கொண்டு வருவதற்கு வசதியாகவே மத்திய அரசு தன் வசம் உள்ள டெல்லி போலீஸ் மூலமாக தினகரனுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியதாகவும் பேச்சு அடிபடுகிறது.
எனவே தானாக தினகரனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மாறாக பாஜகவின் ஆசியால்தான் அவருக்கு ஜாமீன் கிடைத்ததாக சொல்கிறார்கள். இதற்குக் காரணமும் சொல்கிறார்கள்.

டெல்லி போலீஸின் கில்லாடித்தனம்
தினகரன் மீது டெல்லி போலீஸ் வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்படியான ஆதாரங்கள் எதையும் சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் தாக்கல் செய்யவில்லை. குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

வேண்டும் என்றே
இந்த சூழலில், தொடர்ந்து ஜாமீன் மறுப்பதற்கு முகாந்திரம் இல்லை என கோர்ட் கருதியதால் தினகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாஜக ஆதரவால்தான்
பா.ஜ.க. வின் ஆதரவில் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஒரு "அசைன்மெண்ட்" பா.ஜ.க.மேலிடத்தால் தினகரனுக்கு தரப்பட்டுள்ளதாம். அதன் பொருட்டே அவர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார் என்கிறது பா.ஜ.க.வட்டாரம்.

அது என்ன வேலை
அது என்ன அசைன்மென்ட் என கமலாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்க்கான அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை முழுமையாக பெறுவதில் சிக்கல் இருக்கிறது.

எடப்பாடி அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்
எடப்பாடியால் எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. சசிகலா அல்லது தினகரன் இருவரில் ஒருவரால் மட்டுமே அதிமுக எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்த முடியும்.

சசிகலா கஷ்டம்.. தினகரன் ஈஸி
சசிகலா விஷயத்தில் சட்டச்சிக்கல் இருக்கிறது. தினகரனுக்கு அந்த பிரச்சனை இல்லை. அதனால் அவர் மூலம் அதிமுக எம்.எல்.ஏ.க்களை ஒருமுகப்படுத்தும் அசைன்மென்ட்டடை கொடுத்து, அவரை ஜாமீனில் வெளியே விடலாம் என முடிவு செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவரும் அதற்கு சம்மதித்துள்ளதன் அடிப்படையில் தான் ரிலீஸாகியிருக்கிறாராம்.

ஆனால் என்ன செய்யப் போகிறாரோ
இதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்கிறார்கள். ஆனால், வெளியே வந்துள்ள தினகரன், பா.ஜ.க.வை ஆதரிப்பாரா? அல்லது எதிர்ப்பாரா? என்பது போகப் போகத் தெரியும்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?











Click it and Unblock the Notifications