For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலையாளிகள் ஏன் திடீர்னு மாதா அமிர்தானந்தமயிக்கு மீம்ஸ் போடுகிறார்கள்?

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக்கில் பேசப்படுகிறது.

கேரள மாநிலம் கொச்சியில் மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான அமிர்தா மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஃபேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நர்ஸின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், அவரை ரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை அளிப்பதாகவும் ஃபேஸ்புக்கில் கூறப்படுகிறது.

Why do people suddenly troll Amirthanandamayi?

இந்த செய்தி உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது. ஆனால் அந்த செய்திகளில் மருத்துவமனையின் பெயர் போடவில்லை. இந்நிலையில் போராளி ஷாஜி என்பவர் மருத்துவமனையின் பெயரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து பலரும் அமிர்தானந்தமயியை ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்து மீம்ஸ் போடத் துவங்கினர். சிலர் இந்த சம்பவம் உண்மை தான் என ஃபேஸ்புக்கில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அமிர்தா மருத்துவமனையின் பெயரை கெடுத்துவிட்டதாகக் கூறி ஷாஜி மீது மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. மேலும் தங்கள் மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என அமிர்தா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
People of Kerala are trolling Matha Amirthanandamayi after news came that a nurse working in Amirtha hospital is brutally raped.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X