உள்ளே புகுந்து அடித்ததெல்லாம் ஓகே... ஏன் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருகிறது மியான்மர்??
டெல்லி: மியான்மருக்குள் இந்தியா நுழைந்து தீவிரவாதிகளை தாக்கி அழித்த பெருமிதங்கள் ஒருபுறம் இருக்க.. இந்த பயங்கரவாதிகள் பதுங்க ஏன் மியான்மர் இடம் கொடுக்கிறது என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மணிப்பூர், அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்தினர் மீது வடகிழக்கில் தனி நாடு கோருகிற தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து இந்தியா தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இந்தியாவின் இந்நடவடிக்கை குறித்து சர்வதேச அளவிலான வாதங்கள் அரங்கேறுகின்றன.. அண்டை நாடான பாகிஸ்தானோ எங்கே தங்கள் நாட்டுக்குள் நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்திவிடுமோ என பதறுகிறது. இந்த நிலையில்தான் மியான்மருக்கும் தீவிரவாதிகளுக்குமான தொடர்பு என்ன? அவர்களுக்கு ஏன் அந்நாடு அடைக்கலம் கொடுக்கிறது என்கிற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
- கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே மியான்மரை மறைவிடமாகவே தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
- மியான்மர்இந்தியா எல்லையில்தான் பெரும்பாலான தீவிரவாதிகள் தங்களது முகாம்களை அமைத்துள்ளனர்.
- இவற்றில் இந்தியா, மியான்மரில் உள்ள நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைந்து அகன்ற நாகாலாந்து என்கிற தனிநாடு கோருகிற தீவிரவாத குழு முதன்மையானது.
- அகன்ற நாகாலாந்து கோருகிற குழுக்களில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங் பிரிவு)வும் ஒன்று.
- இந்த அமைப்பின் தலைவரான கப்லாங், மியான்மர் மற்றும் சீனா எல்லைகளில்தான் வாழ்ந்து வருகிறார்.
- இதேபோல் பல்வேறு தீவிரவாத குழுக்களும் எல்லையில் முகாமிட்டுள்ளன.
- இக்குழுக்களுக்கு சீனா அதிநவீன ஆயுதங்களை வழங்கி வருவதால் மியான்மர் அரசாலோ ராணுவத்தாலோ தலையிட முடியாத கையறு நிலை இருக்கிறது.
- அத்துடன் இந்த தீவிரவாதிகளை அழிக்கும் வல்லமையும் யுக்தியும் மியான்மர் ராணுவத்துக்கும் இல்லையாம்.
- மேலும் மியான்மர் ராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பலருக்கும் இந்த தீவிரவாத குழுக்கள் பணத்தை வெள்ளமாக வாரி இறைத்து வருகின்றனராம்... இதனால்தான் மியான்மர் ராணுவம் மவுனம் காத்தே வருகிறதாம்..
- மியான்மரின் இத்தகைய போக்குதான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து தீவிரவாதம் உயிர்ப்போடு இருக்கவும் காரணம் என்கின்றனர் உளவுத் துறை அதிகாரிகள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications