ரயில் பெட்டிக்குள் நசுங்கிய பயணிகள்.. வெட்டி எடுத்து மீட்பு! பணியில் தாமதம் இதனால்தான்.. ஷாக் தகவல்!
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே நடைபெற்ற ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3 ரயில்களின் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று கிடப்பதால், மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், இரவு 7.20 மணியளவில் ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டத்தில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனர்.

அதோடு சற்று நேரத்தில் அந்த வழியில் வந்த மற்றொரு ரயிலும் தடம்புரண்ட ரயில் மீது மோதியுள்ளது. பெங்களூரின் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அங்கு வந்தபோது உடனடியாக ரயிலை நிறுத்த முடியாமல் மோதியதால், அந்த ரயிலின் 3-4 பெட்டிகளும் தடம் புரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக 2 பயணிகள் ரயிலும், 1 சரக்கு ரயிலும் ஒன்றுடன் ஒன்று ஏறி நசுக்கி இருப்பதால், உயிரிழப்பு மற்றும் படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை ரயில் பெட்டிகளுக்குள் சிக்கி நசுங்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காட்டுப்பகுதியில் அதுவும் இரவு நேரத்தில் இந்த ரயில் தடம்புரண்டு விபத்து நடந்திருப்பதால் மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரயில் பெட்டிகள் நசுங்கி இருப்பதால் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக எனக் கூறப்படுகிறது.
3 ரயில்கள் மோதி தடம்புரண்டு கிடப்பதால், உள்ளே சிக்கியவர்களை மீட்க மீட்புப் படையினர் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதனால் ரயில் பெட்டிகளை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரயில் பெட்டிகளை வெட்டி எடுத்து, உள்ளே சிக்கியவர்களை மீட்க வேண்டியுள்ளதால், மீட்புப் பணிகள் தாமதம் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications