மூவர்ணகொடி போர்த்தும் அளவுக்கு ஸ்ரீதேவி என்ன செய்துவிட்டார்? மகாராஷ்டிர அரசை விளாசிய ராஜ்தாக்ரே
மூவர்ண கொடி போர்த்தும் அளவுக்கு நடிகை ஸ்ரீதேவி நாட்டுக்கு என்ன செய்து விட்டார் என மகாராஷ்டிர அரசை ராஜ்தாக்ரே விளாசியுள்ளார்.
மும்பை: மூவர்ண கொடி போர்த்தும் அளவுக்கு நடிகை ஸ்ரீதேவி நாட்டுக்கு என்ன செய்து விட்டார் என மகாராஷ்டிர அரசை ராஜ்தாக்ரே விளாசியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் துபாய் சென்றிருந்தார். கடந்த மாதம் 24ஆம் தேதி அவர் துபாய் நட்சத்திர ஹோட்டலில் உள்ள குளியலறையில் உள்ள பாத் டப்பில் இறந்து கிடந்தார்.
மதுபோதையில் அவர் பாத் டப்பில் விழுந்து மூச்சு திணறி உயரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஸ்ரீதேவியின் மறைவுக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

ஸ்ரீதேவி உடல்
ஸ்ரீதேவியின் உடலுக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் தேசிய கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது. இந்த விவகாரம் அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

போர்த்தப்பட்டது ஏன்?
இந்நிலையில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கின் போது மாநில அரசின் சார்பில் அவரது உடலுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டது ஏன்? என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்ரே கேள்வி எழுப்பி உள்ளார்.

நாட்டுக்கு என்ன செய்தார்?
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ராஜ் தாக்ரே மூவர்ணக்கொடி போர்த்தும் அளவிற்கு அவர் நாட்டுக்காக என்ன செய்தார்? என்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்ரே கேள்வி எழுப்பி உள்ளார்.

மீடியாக்களுக்கு அழுத்தம்
மேலும், நிரவ் மோடியின் பல கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே, ஸ்ரீதேவியின் மரணத்தை பெரிதாக்கிக் காட்டும் படி மீடியாக்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது என்றும் ராஜ்தாக்ரே குற்றம்சாட்டினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications