ஒரே ஒரு சீட் கொடுத்ததால்தான் அதிமுக அணியில் இருந்து விலகினோம்: டி. ராஜா
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் இருந்து வெளியேறுவதாக நேற்று இடதுசாரிகள் அறிவித்தனர். அதற்கு முன்னதாகவே "நண்பர்களாக சேர்ந்தோம்.. நண்பர்களாக பிரிவோம்" என்று அதிமுகவே சொல்லிவிட்டது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி. ராஜா , இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவிடம் தலா 3 தொகுதிகள் கேட்டன. ஆனால் அ.தி.மு.க ஒரு தொகுதிதான் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தது.
தமிழகத்தில்தான் இரண்டு இடதுசாரி கட்சிகளும் இணைந்து செயல்படுகின்றன. தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு பாரம்பரியமாக ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். அதனால் ஒரு இடம் அளிப்பதை ஏற்க இயலாமல் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார்.












Click it and Unblock the Notifications