மக்களின் உடல் நிலை, கல்வி பற்றி மோடி அரசுக்கு எந்த அக்கறையுமில்லையா?
'பட்ஜெட் என்பது வெறும் சடங்குதான். அந்த சடங்கையும் கூட கார்ப்பொரேட்கள் நலனுக்காகவே செய்வோம்' என்பதில் தெளிவாக இருக்கிறது மோடி அரசு.
மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்குத்தான் முதலிடம் தருவோம் என்று காவியின் மீது சத்தியம் அடித்தவர்கள், இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 15 சதவீதமும், கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டை 16 சதவீதமாகவும் குறைத்திருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் கல்வித் துறைக்கு ஒவ்வொரு நாடும் தனது மொத்த வருவாயில் (ஜிடிபி) 4.9 சதவீதத்தை ஒதுக்குகின்றன. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒதுக்குவது 3.3 சதவீதம்தான். இப்போது அதிலும் 16 சதவீதம் கட்..!
ஒவ்வொரு 5 கிமீ தூரத்துக்கும் ஒரு பள்ளிக்கூடம் இருக்கும்படி செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ஆனால் இப்போது ஒதுக்கியுள்ள நிதியில் 10 கிமீட்டருக்கு ஒரு பள்ளிகூட சாத்தியமில்லையே!
பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அறிவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் சராசரி கல்வி 74 சதவீதம்தான்.
நாடு முழுவதும் சுகாதாரக் கேடுகள் அதிகரித்து வரும் சூழலில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் நிதியில் ரூ 5,897.5 கோடியை குறைத்திருக்கிறார் நிதியமைச்சர்.
ஆனால் பெரும் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக்கியுள்ளது மோடி அரசு (அவங்க கண்ணுல தூசி விழுந்திடக் கூடாதே...) 'தேர்தலின் போது அவர்களிடம் வாங்கியதைத் திருப்பித் தரும் மோடியின் நன்றி விசுவாசமே இந்த பட்ஜெட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது' என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications