For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியா காந்தி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டது ஏன்? பரபர தகவல்கள்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே 'அரசியல்' காரணங்களுக்கு என கூறப்படுகிறது.

By Raj
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்படதே 'அரசியல்' காரணங்களுக்காக என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீரென டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு நச்சானதாலேயே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

அரசியல் காரணங்கள்..

அரசியல் காரணங்கள்..

ஆனால் உண்மையில் அரசியல் காரணங்களுக்காகவே மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்காக சோனியா காந்தி ஒரு டீ பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

தலைவர்களுக்கு அழைப்பு

தலைவர்களுக்கு அழைப்பு

இந்த டீ பார்ட்டிக்கு லாலு பிரசாத் யாதவ், அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் சோனியா அழைத்த தலைவர்கள் அடுத்தடுத்து நெருக்கடியில் சிக்கிக் கொண்டனர்.

லாலு, கேஜ்ரிவால்

லாலு, கேஜ்ரிவால்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலு பிரசாத்தை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஊழல் புகாரில் அரவிந்த் கேஜ்ரிவால் சிக்கினார்.

டீ பார்ட்டி கேன்சல்

டீ பார்ட்டி கேன்சல்

இப்படி அடுத்தடுத்து தாம் அழைத்த தலைவர்கள் சர்ச்சைகளில் சிக்கியதால் சோனியா காந்தி டீ பார்ட்டியை கேன்சல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருக்கவே சோனியாவுக்கு உடல்நலக் குறைவு என கூறப்பட்டுள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.

English summary
Here the reasons for Sonia Gandhi admitted to Hospital recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X