Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட்டு இந்தியாவுக்குத் திரும்பிய 3 இளைஞர்கள்... ஏன்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: துரித கதியில் இந்தியாவை விட்டு வெளியேறி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த 3 மகாராஷ்டிர இளைஞர்கள் அதே வேகத்தில் அங்கிருந்து வெளியேறி தாயகம் திரும்பி விட்டனர். தாங்கள் எதிர்பார்த்தது போன்ற போரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஈடுபடவில்லை என்பதை அங்கு போனதும் உணர்ந்து கொண்டதால் அவர்கள் நாடு திரும்பி விட்டனர்.

ஈராக் போய் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்த இந்த மூவருக்குமே அந்த தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் திருப்தியைத் தரவில்லை. மாறாக அதிருப்தியையே அளித்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் தங்களது குடும்பத்தைத் தொடர்பு கொண்ட இவர்கள் வீடு திரும்ப விரும்புவதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது நாடு திரும்பி விட்ட இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்துள்ளனர்.

Why three youth left the Isis to return to india

கடந்த செப்டம்பர் மாதம் 3 இளைஞர்களில் ஒருவரான ஷாஹீன் டங்கி, சிரியாவிலிருந்து தனது தாயாரைத் தொடர்பு கொண்டு பேசினார். குண்டு வெடிப்பு ஒன்றில் தனது நண்பரான மஜீத் என்பவர் கொல்லப்பட்டதைப் பார்த்து மனம் உடைந்து போயிருந்த ஷாஹீன் தனது தாயாரைத் தொடர்பு கொண்டு உருக்கமாக பேசியுள்ளார். இருப்பினும் தனது தாயாரை பயமுறுத்துவது போல அவர் பேசவில்லை. மாறாக, தான் நலமுடன் இருப்பதாக கூறிய அவர் மஜீத் இறந்த தகவலை மட்டும் கூறியுள்ளார்.

இதுபோல ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு அங்கு போய்ச் சேர்ந்த இளைஞர்கள் விஷயத்தில் இந்திய அரசு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவில்லை. வழக்குகள் போடுவதில்லை. மாறாக, அங்கிருந்து வெளியேறி நாடு திரும்பிய இளைஞர்களுக்கு அது கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்கிறது. இது ஆறுதல் தரும் விஷயமாகும்.

இந்திய அரசின் இந்த நடவடிக்கையால் பாதை மாறிப் போக நினைக்கும், திருந்தி திரும்பி வரும் இளைஞர்களுக்கும் தங்களது தவறு புரிந்து சரிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் கூறுகையில், பத்து பேர்தான் தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைய விரும்புகின்றனர் என்றார்.

இந்த மூன்று மகாராஷ்டிர இளைஞர்கள் விஷயத்திலும் கூட மத்திய அரசு பரிவுடன் கூடிய அணுகுமுறையையே கடைப்பிடிக்கிறது. அவர்களிடம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் குறித்த விவரத்தை மட்டுமே அரசு கேட்டு விவரம் சேகரித்துள்ளது. வேறு விசாரணை எதையும் நடத்தவில்லை. இந்த மூன்று பேருமே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் டெக்னிக்கல் குழுவுடன் இணைந்து செயல்பட விரும்பி சென்றுள்னர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும், இந்தியர்களுக்கும் நிச்சயம் ஒத்துவராது. அந்த அமைப்பில் இந்தியர்களால் நிரந்தரமாக நீடிக்கவு்ம் முடியாது. இங்கிருந்து போய் அங்கு இணையும் போதுதான் அது அவர்களுக்குத் தெரிய வருகிறது. எனவேதான் அங்கு போய் திரும்புவோர் அதிகரித்துள்ளனர் என்று இந்திய உளவு அமைப்புகள் கூறுகின்றன.

ஐஎஸ் தீவிரவாதிகள் மிகவும் குரூரமானவர்கள், கொடுமையானவர்கள், ஈவு இரக்கம் இல்லாதவர்கள். இந்த குணம், இந்தியர்களுக்கு பொருந்ததாகும். இதனால்தான் அங்கு போன பின்னர் அவர்களின் குரூர முகத்தைப் பார்த்து திரும்பி வருகின்றனர். முதலில் ஐஎஸ் அமைப்பின் கொள்கை, போக்கு உலக நாடுகளின் இளைஞர்களை ஈர்த்தது உண்மைதான். ஆனால் ஐஎஸ் அமைப்பின் உண்மையான முகம் பல நாட்டவரை, குறிப்பாக இந்தியர்களை அதிர்ச்சியுற வைத்துள்ளது.

மேலும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணைவதில்லை என்று இந்தியா எடுத்த முடிவும் கூட மிகச் சரியானதாகும், பொருத்தமானதாகும். இதுபோன்ற கூட்டணியில் இணைந்தால் நம் மீது முஸ்லீம் எதிர்ப்பு முத்திரை வந்து விடும் என்பதை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு எதிரான போக்கும், போராட்டமும் இந்தியாவில் வெடிக்கும் என்பதையும் அரசு உணர்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+