"20 நாட்கள் தலைமறைவு.." திடீரென பொதுவெளிக்கு வந்த சூரத் காங்கிரஸ் வேட்பாளர்! என்ன தான் நடக்கிறது
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். இதற்கிடையே 20 நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் பொதுவெளிக்கு வந்து சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.. இதில் குஜராத்தில் ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கு அப்போது தேர்தல் நடந்தது.

சூரத் தொகுதி: இதில் குஜராத்தில் உள்ள சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது. ஏனென்றால் அங்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகளில் உள்ள குழப்பம் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மற்ற அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், பாஜக அங்குப் போட்டியின்றி வெற்றி பெற்றது.
அப்போது நிலேஷ் கும்பானி தலைமறைவான நிலையில், அவர் மீது காங்கிரஸ் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தது. சுமார் 20 நாட்களாக நிலேஷ் கும்பானி எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. இந்தச் சூழலில் 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வந்த நிலேஷ் கும்பானி சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தனக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கூறிய அவர், இத்தனை காலம் குஜராத் மாநில தலைவர் சக்திசிங் கோஹிலுக்காகவே அமைதியாக இருந்ததாகத் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு ஒரு சீட்! குஜராத் சூரத்தில் வெற்றி! காங்கிரஸ் வேட்பு மனு நிராகரிப்பு!
பரபர குற்றச்சாட்டு: அவர் மேலும் பேசுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் நான் துரோகம் செய்ததாகக் கூறுகிறார்கள். உண்மையில் காங்கிரஸ் கட்சி தான் எனக்குத் துரோகம் செய்தது.. கடந்த 2017 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் சூரத் கம்ரேஜ் தொகுதியில் எனது டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தது காங்கிரஸ்தான். முதல் தவறை செய்தது காங்கிரஸ்தான். நான் இல்லை
அந்த 5 பேர்: உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இப்படிச் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் சூரத்தில் ஐந்தே ஐந்து நிர்வாகிகள் தான் காங்கிரஸை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் இங்குக் கட்சியை நாசம் செய்கிறார்கள். அவர்களும் வேலை செய்ய மாட்டேன் என்கிறார்கள். மற்றவர்களையும் வேலை செய்ய விட மறுக்கிறார்கள்.
ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இந்தியா கூட்டணியில் தான் உள்ளன. ஆனால், நான் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் பிரச்சாரம் செய்தபோது இந்த 5 நிர்வாகிகள் நான் ஏதோ மிகப் பெரிய தவறு செய்துவிட்டது போலப் பேசினர்" என்றார்.
கடந்த 2017 தேர்தல் சமயத்தில் நடந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இப்போது இதைச் செய்தீர்களா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார். மீண்டும் 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் தான் தனக்குத் துரோகம் செய்ததாகக் குறிப்பிட்டார்.
என்ன நடந்தது: கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நிலேஷ் கும்பனியின் வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டது.. அவரை முன்மொழிந்த மூன்று பேரின் கையெழுத்து போலி என்று கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல தற்செயலாகக் காங்கிரஸின் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. மறுநாள் பிஎஸ்பி வேட்பாளர் உட்பட அனைவரும் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து, அங்கு பாஜகவின் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியில் இருந்ததால் சூரத்தில் ஆம் ஆத்மி தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. நிலேஷ் கும்பானி ஏப்ரல் 22 முதல் தலைமறைவானார். இதையடுத்து அவர் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான் சுமார் 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வந்த நீலேஷ் இந்த பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
-
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications