For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹாஹாஹஹா... எதியூரப்பாவின் நம்பிக்கையைப் பாருங்கப்பா!

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜோதிடத்தின் மீது யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போது கர்நாடக ஜனதாக் கட்சி என்ற கட்சியை நடத்தி வருபவருமான எதியூரப்பாவுக்கு அபாரமாகவே இருக்கிறது. அவருக்கு நெருக்கமான ஜோதிடர்கள் என்ன கூறினாலும் தட்டாமல் கேட்டு அதன்படியே செயல்படுபவர் அவர்.

அப்படித்தான் இப்போதும் அவரது ஜோதிடர்கள் ஒரு ரகசிய உத்தரவைப் போட்டுள்ளனர். அதை அப்படியே பாலோ செய்து வருகிறாராம் எதியூரப்பா.

அதாவது, மறுபடியும் பாஜகவில் உங்களைச் சேர்க்கும் வரை அந்தக் கட்சியின் பெயரை நீங்கள் உச்சரிக்கவே கூடாது. அப்படிச் செய்தால் மீண்டும் சேருவது கஷ்டமாகி விடும் என்று அறிவுறுத்தியுள்ளனராம்.. பிறகென்ன,, அப்படியே பின்பற்றி வருகிறார் எதியூரப்பா.

பழைய கட்சி.. நான் விலகிய கட்சி...

பழைய கட்சி.. நான் விலகிய கட்சி...

எதியூரப்பா மீண்டும் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்து அழைப்புக்காக காத்திருக்கிறார். ஆனால் அவரது பேட்டிகளை உற்று நோக்கினால் அவரது பேட்டியின்போது எந்த ஒரு இடத்திலும் பாஜக என்ற பெயரையே அவர் சொல்லாமல் தவிர்ப்பதைக் கவனிக்கலாம். பழைய கட்சி அல்லது நான் விலகிய கட்சி அல்லது தேசிய கட்சி.. இப்படித்தான் அவர் சொல்லி வருகிறார்.

தலைவருக்கு அதில் நிறைய நம்பிக்கை பாஸ்..

தலைவருக்கு அதில் நிறைய நம்பிக்கை பாஸ்..

இதுகுறித்து கர்நாடக ஜனதாக் கட்சி வட்டாரத்தில் ''ஏனு சமாச்சாரா குரு'' என்று விசாரித்தால், தலைவருக்கு ஜோதிடத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அவரது நம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. அதில் ஒன்றுதான் இது.

ஒரு ஜோசியக்காரர் சொன்னதால்...

ஒரு ஜோசியக்காரர் சொன்னதால்...

தலைவருக்கு நெருக்கமான ஒரு ஜோதிடர், மீண்டும் பாஜகவில் சேரும் வரை அக்கட்சியின் பெயரைக் கூட நீங்கள் உச்சரிக்கக் கூடாது என்று கூறி விட்டார். அதை அப்படியே பின்பற்றி வருகிறார் எதியூரப்பா.

பல மாதமாக பேசுகிறார்கள்

பல மாதமாக பேசுகிறார்கள்

எதியூரப்பா மீண்டும் பாஜகவில் சேருவது தொடர்பாக பல மாதங்களாகவே ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அப்போதெல்லாம் அவர் ஒரு முறை கூட பாஜகவின் பெயரை சொன்னதே இல்லை.

எதியூரப்பா மூச்....

எதியூரப்பா மூச்....

ஆனால் இப்படி ஒரு டாக் பெங்களூரில் உலவி வருவது குறித்து விளக்கமே கொடுக்காமல் கமுக்கமாக இருக்கிறார் எதியூரப்பா.

2012ல் ஆரம்பித்த புதுக் கட்சி

2012ல் ஆரம்பித்த புதுக் கட்சி

கர்நாடக ஜனதாக் கட்சியின் தலைவராக 2012ம் ஆண்டின் பிற்பகுதியில் பொறுப்பேற்றார் எதியூரப்பா. பல வருடமாக பாஜகவின் கர்நாடக முகமாக திகழ்ந்த அவர், அங்கு நெருக்கடிகள் அதிகரித்து சிக்கலுக்குள்ளாகி வெளியேறினார் என்பது நினைவிருக்கலாம்.

கட்சி ஆரம்பிக்க காஷ்மீருக்கு பயணம்

கட்சி ஆரம்பிக்க காஷ்மீருக்கு பயணம்

ஜோதிட நம்பிக்கைகள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருப்பவர் எதியூரப்பா. சகுனம் பார்க்காமல் எதையுமே செய்ய மாட்டார். தனது புதிய கட்சியைக் கூட ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு வந்த பின்னர்தான் தொடங்கினார்.

அதுவா.. இதுவா..??

அதுவா.. இதுவா..??

அந்தக் கோவிலுக்குப் போனபோது அவர் இரண்டு சுருட்டிய தாள்களை கோவிலில் வைத்தாராம். அதில் ஒன்றில் பாஜகவிலேயே நீடிப்பது என்றும், இன்னொன்றில் தான் தொடங்கத் திட்டமிட்டுள்ள கர்நாடக ஜனதாக் கட்சியின் பெயரையும் எழுதி வைத்திருந்தா்ராம். சீட்டு குலுக்கிப் பார்த்தபோது அதில் கர்நாடக ஜனதா என்று வந்ததால்தான் புதுக் கட்சியை அறிவித்தாராம்.

ஒரு வாரத்தில் ஸ்வீட் நியூஸ்....

ஒரு வாரத்தில் ஸ்வீட் நியூஸ்....

தற்போது எதியூரப்பாவை மீண்டும் பாஜகவில் இணைத்துக் கொள்ளும் மூடுக்கு அக்கட்சி வந்து விட்டதாகவே தெரிகிறது. பாஜகவில் எதியூரப்பா இருந்தபோது கடும் எதிர்ப்பாளராக விளங்கியவரான அனந்த்குமாரே, சமீபத்தில் இன்னும் ஒரு வாரத்தில் ஸ்வீட் நியூஸ் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

தும்ப சென்னாகிதே.. குரு!

English summary
Not a day passes without someone from the BJP or former chief minister B S Yeddyurappa's new party KJP talking about his return to the former. But in all this hubbub, what has gone unnoticed is that Yeddyurappa has not once taken the name of BJP even while referring to his old party. When asked questions about it by media persons, Yeddyurappa only makes an indirect reference, calling it "the old party," "the national party," or "the party I left," instead of naming the BJP. Sources in KJP say this is because Yeddyurappa has been advised by astrologers not to take BJP's name till he returns to the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X