புதுப்புடவை வாங்கித்தரலையே... கோபத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்த புதுப்பெண்
வீட்டு விசேசத்திற்கு புதுப்புடவை வாங்கிக்கொடுக்காத கணவன் மீது கோபம் கொண்ட புதுப்பெண் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலிகார்: சின்னச் சின்ன விசயத்திற்கெல்லாம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். புதிதாக திருமணமான இளம் பெண் ஒருவர் வீட்டு விசேசத்திற்கு கட்டிக்கொள்ள புதுப்புடவை வாங்கித்தராத கணவன் மேல் கோபம் கொண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த அமித் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அஞ்சனாவிற்கும் கடந்த மே மாதம் 13ஆம் தேதியன்று திருமணம் நடந்தது. சந்தோசமான திருமண வாழ்க்கையில் சிறு சண்டை கூட ஏற்படவில்லை. விதி சேலை வடிவில் விளையாடியது.

கடந்த வாரம் சனிக்கிழமையன்று அமித் வீட்டில் சிறு விசேசத்திற்கு ஏற்பா செய்திருந்தனர். அப்போது பீரோவை திறந்து பார்த்த அஞ்சனாவிற்கு நல்லதாக புடவை எதுவும் இல்லையே என்று வருத்தப்பட்டார்.
கணவனிடம் புது புடவை வேண்டும் என்றும் கேட்டார். அதற்கு கணவன் அமித், இப்போது புடவை வேண்டாம் என்று கூறி சமாளித்தார். ஆனாலும் அஞ்சனாவின் மனது சமாதானம் ஆகாவில்லை. கோபத்தோடு சண்டை போட்டார். அதற்கு அமித் ஒருவழியாக பேசி சமாதானம் செய்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
கோபத்தோடு இருந்த அஞ்சனாவோ, பதற்றமான நிலையில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டை விட்டு வெளியே போய்விட்டு வந்த அமித், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். போலீசில் தகவல் கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்சனாவின் அப்பா ஆதார் சிங் சம்பவ இடத்திற்கு வந்து தனது மகள் வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications