பசிக்குது.. சோறு போடும்மா.. கெஞ்சிய கணவர்.. அரிவாளால் வெட்டி வீழ்த்திய மனைவி
சாப்பாடு கேட்ட கணவனை, கத்தியால் குத்தி கொன்றுள்ளார் மனைவி
Recommended Video
கோட்டயம்: நாட்டில் சீரியல் பைத்தியங்களுக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. "சோறு போடாமல் என்ன டிவி வேண்டிக் கிடக்கு" என்று கோபமாக கேட்ட கணவரை அரிவாளால் வெட்டி வீழ்த்தியுள்ளார் பாசக்கார மனைவி ஒருவர்.
கேரளத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. அரிவாளும் கையுமாக மனைவியை இப்போது போலீஸார் கைது செய்து உள்ளே தள்ளியுள்ளனர். கோட்டயத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மனர்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ். சம்பவத்தன்று இரவு வெளியில் போய் விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் அபிலாஷ். அப்போது டிவி பார்த்துக் கொண்டிருந்தார் அவரது மனைவி. அவர் ஒரு டிவி பைத்தியமாம். எப்போது பார்த்தாலும் சீரியல்தானாம். இதனால் புருஷன் பொண்டாட்டிக்கு இடையே எப்பவும் சண்டை நடக்குமாம்.
அன்றும் கூட பசியோடு வந்த அபிலாஷ் சாப்பாடு போடச் சொல்லியுள்ளார். ஆனால் மனைவியோ "இருங்க இந்த சீரியல் முடியட்டும் வர்றேன்" என்று கூறியபடி டிவியிலிருந்து பார்வையைத் திருப்பவில்லையாம். இதனால் கோபமாகியுள்ளார் அபிலாஷ். "எப்பப் பார்த்தாலும் சீரியல்தானா" என்று கோபமாக கேட்டார் போலத் தெரிகிறது.
அப்போது வீட்டில் மனைவியின் தாய் தந்தையும் இருந்துள்ளனர். அவர்கள் கோபமாக அபிலாஷை திட்டியுள்ளனர். அவ்வளவுதான்.. பிரச்சினை பெரிதானது. இந்த நிலையில் சீரியல் பார்க்க முடியாமல் செய்து விட்டாரே. இப்படி பிரச்சினையாக்கி விட்டாரே என்று கோபமடைந்த அபிலாஷின் மனைவி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரை ஆத்திரத்துடன் வெட்டி வீழ்த்தி விட்டார்.
படுகாயமடைந்த அபிலாஷ் கீழே விழுந்து துடித்தார். உடனடியாக அவரை கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குமரோகம் போலீஸார் அபிலாஷ் மனைவியைக் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். அபிலாஷ் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வார் என்று தற்போது போலீஸார் கூறுகின்றனர். என்ன கருமமோ!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications