ஓயோ ஹோட்டல் ரூமில் காதலனுடன் மனைவி.. சைலண்ட்டாக நின்ற கணவர், மாமியார்.. 12 அடி உயரத்தில் ஒரே ஜம்ப்
கான்பூர்: கள்ளக்காதல்கள் அட்டகாசங்கள் இந்தியா முழுவதிலுமே பெருகி வரும் சூழ்நிலையில், குடும்ப உறவுகளும் மெல்ல மெல்ல சிதைந்து வருகின்றன.. கள்ளக்காதல் வன்முறைகள் அதிகமாகி கொண்டிருப்பதால், அதுதொடர்பான குற்றங்களும் அதிகரித்து வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.. இதோ உத்தர பிரதேசத்தில், தகாத உறவில் ஈடுபட்ட ஒருவர் பொதுவெளியில் அம்பலப்பட்டுள்ளார்.. அதிலும் திருமணமான பெண் ஒருவர் அனைவர் முன்பும் அசிங்கப்பட்டு நின்றுள்ளார். என்ன நடந்தது உத்தரபிரதேசத்தில்?
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, (OYO) ஓயோ ரூம்களை சிலர் தவறான முறைகளில் பயன்படுத்துவதாக தொடர் புகார் வந்த நிலையில், விதிகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டது..

குறிப்பாக, திருமணமாகாத 18 வயதுக்கு உட்பட்ட தம்பதிகள், ஓயோ அறைகளுக்கு சென்று, தவறாக பயன்படுத்துவது கலாச்சார சீர்கேடு என்ற விமர்சனங்கள் அதிகரித்தன.. எனவே, ஓயோ விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
புதிய விதிமுறைகள்
அதன்படி திருமணமாகாத தம்பதிகள், இனி செக்-இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.. ஓயோவில் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் உட்பட அனைத்து ஜோடிகளும் செக்-இன் செய்யும்போது, தங்கள் உறவின் ஆதாரத்தை வழங்க வேண்டும்.
ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை மட்டுமே அடையாள சான்றிதழ்களாக ஏற்றுக்கொள்ளப்படும். பான் கார்டில் முகவரி இல்லாததால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. அறையில் தங்க வரும்போது அடையாள அட்டையின் அசல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
எதிர்ப்புகள் - விமர்சனங்கள்
இந்த புதிய விதி, உத்தரபிரதேசத்தின் மீரட்டில் மட்டும் முதலில் அறிமுகம் செய்யப்படுவதாகவும், இந்த புதிய விதியை உடனடியாக அமல்படுத்துமாறு நகரத்தில் உள்ள தங்களின் ஹோட்டல்களுக்கு ஓயோ அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், ஓயோவின் இந்த புதிய விதிகளுக்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியது.. வயது வந்த திருமணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது போன்றது என மனித உரிமை ஆர்வலர்கள், கடுமையாக விமர்சித்திருந்தது நினைவிருக்கலாம்.
ஓயோ ஓட்டல் அறை
இந்நிலையில், ஓயோ ஓட்டலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ளது பராத் என்ற பகுதி.. இங்கு செயல்பட்டு வரும் ஓயோ ஹோட்டலில் , திருமணமான பெண், தன்னுடைய கள்ளக்காதலனுடன் அறை எடுத்து தங்கியதாக தெரிகிறது.
ஆனால், அதற்குள் இந்த விஷயம், அப்பெண்ணின் கணவருக்கு தெரிந்துவிட்டது.. இதைக்கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கணவர், தன்னுடைய அம்மாவையும் அழைத்து கொண்டு, போலீசுக்கு சென்றார்.. அங்கே மனைவி ஓட்டலில் இன்னொருவருடன் தங்கியிருப்பதாக தனக்கு தகவல் வந்ததை கூறினார்.
12 அடி உயரம்
இதையடுத்து போலீசாரும், கணவன், மாமியாருடன், சம்பந்தப்பட்ட ஓட்டல் ரூமுக்கே வந்துவிட்டனர்.. இதனை அறையிலிருந்த அந்த பெண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உடனே அங்கிருந்து எகிறி தப்ப முயன்றார்..
தன்னுடைய துப்பட்டாவில் முகத்தை மூடிக்கொண்டு, ஹோட்டலின் பின்புற ஜன்னல் வழியாக வெளியேறி, அதாவது, 12 அடி உயரத்திலிருந்து கீழே குதித்தார்.. இந்த பெண் 12 உயரத்திலிருந்து கீழே குதிப்பதையெல்லாம் , கணவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துவிட்டார்.. இந்த வீடியோவை பெண்ணின் மாமியாரே சோஷியல் மீடியாவில் பதிவிட்டும் உள்ளார்..
கண்டித்தும் கேட்கவில்லை
இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, பாக்பத்தின் துகானா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. கடந்த 2019ல் ககோர் கிராமத்தை சேர்ந்த நபருடன் திருமணம் நடந்துள்ளது.. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
ஆனால், திருமணத்திற்கு முன்பே, பல பேருடன் மனைவி உறவு வைத்திருந்ததாகவும், கல்யாணமாகியும் அந்த உறவுகளை மனைவி தொடர்ந்ததாகவும் கணவர் குற்றஞ்சாட்டுகிறார்.. இது தொடர்பாக மனைவியை பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லையாம். இதனால் தம்பதிடையே அடிக்கடி தகராறும், சண்டையும் வந்துபோயிருக்கிறது.

விரட்டி சென்ற கணவர்
சம்பவத்தன்று, தன்னுடைய மனைவி கள்ளக்காதலனுடன் பைக்கில் செல்வதை, கணவரே நேரடியாக பார்த்துள்ளார்.. உடனே பின்னாடியே அவர்களை விரட்டி சென்றபோதுதான், இருவரும் ஓட்டல் ரூமில் நுழைவதை பார்த்துள்ளார்.. அதற்குபிறகுதான் போலீசுக்கு தகவல் தந்தார்..
ஆனால் போலீஸ் வருவது தெரிந்ததும் அந்த பெண், ஹோட்டலின் பின்பக்கம் எகிறி குறித்து தப்பிவிட்டதாக தெரிகிறது. இப்போது அந்த கள்ளக்காதலனை கைது செய்துள்ளோம். விசாரணை நடக்கிறது" என்றனர்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications