கடைசி மூச்சு வரை இந்தியாவில்தான் இருப்பேன்... என் அஸ்தி இங்குதான் கரையும்! - சோனியா உருக்கம்
திருவனந்தபுரம்: இந்தியாதான் என் நாடு.. என் கடைசி மூச்சு வரை இந்தியாவில்தான் இருப்பேன். என் அஸ்தியும் இங்குதான் கரையும், என்று உருக்கமாகப் பேசினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:
இப்போது நான் பேசுவது அரசியல் அல்ல; என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி கூறி வரும் கருத்துக்கு பதில் கூற விரும்புகிறேன்.

என்னை இத்தாலிக்காரர் என மோடி அடிக்கடி கூறுகிறார். ஆம், நான் பிறந்தது இத்தாலியில்தான். எனக்கு அங்கே 93 வயதில் தாய் இருக்கிறார். இதை நான் மறைக்கவில்லை. ஆனால், 1968-இல் என்றைக்கு இந்திரா காந்தியின் மருமகளாக இந்தியாவுக்கு வந்தேனோ அன்றிலிருந்து இன்று வரை இந்தியப் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறேன்.
ஏறத்தாழ 48 ஆண்டுகளாக இங்கு வாழும் எனக்கு நாடு மட்டும் அல்ல வீடும் கூட இந்தியாதான். இங்குதான் எனது அன்பார்ந்தவர்கள் இருக்கிறார்கள். இங்குதான் எனது கடைசி மூச்சு வரை இருப்பேன். எனது அஸ்தியும் உங்கள் மத்தியில்தான் கரையும்.
பிரதமர் நரேந்திர மோடி இத்தனை தரம் தாழ்ந்து பேசுவார் என நினைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் ஒருவரை விமர்சிப்பது பிரதமர் மோடிக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. எனது உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்துகொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. மக்கள் எனது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள் என நம்புகிறேன்," என்றார்.
ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக பாஜகவும் பிரதமர் மோடியும் சோனியா காந்தியை இத்தாலியுடன் தொடர்புபடுத்தி கிண்டலடித்து வருவதற்கு பதிலடியாக சோனியா காந்தி இவ்வாறு பேசியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications