வீட்டில் கல்யாணமா.. நீங்க வங்கியிலிருந்து ரூ. 2.50 லட்சம் பணம் எடுக்கலாம்- சக்தி காந்த தாஸ்

திருமணம் வைத்திருப்பவர்கள் உரிய ஆவணங்களை கொடுத்து வங்கிகணக்கில் இருந்து ரூ. 2.50 லட்சம் வரை வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கலாம் என்று சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் சில்லறை ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து தினசரி 4500 ரூபாய் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அன்றாட செலவிற்கு கூட போதவில்லை என்று திருமணம் நடத்துபவர்கள், விவசாயிகள் கூறி வந்தனர்.

Will ensure farmers do not suffer, Sakthikanta Das

இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ. 25000 ரூபாய் எடுக்கலாம்
  • விவசாயிகள் விளை பொருட்களை விற்கும் போது அதற்கு உரிய பணத்தை செக் ஆக பெறலாம்
  • வர்த்தகர்கள் ஒரு வாரத்திற்கு ரூ.50000 வரை பணம் எடுக்கலாம்
  • வேளாண் சந்தை கமிட்டியில் பதிவு செய்தவர்கள் வாரத்திற்கு ரூ. 50000 எடுக்கலாம்
  • பயிர்க்கடனை திருப்பி செலுத்த 15 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது
  • திருமண வீட்டார் தங்களின் வங்கிகணக்கில் இருந்து ரூ. 2.50 லட்சம் பணம் எடுக்கலாம்
  • திருமணம் நடத்துபவர்கள் உரிய ஆவணங்கள் கொடுத்து ஒரு வங்கிக்கணக்கில் இருந்து 2.50 லட்சம் ரூபாய் பணம் எடுக்கலாம் என்று சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+