அமித் ஷா பிளானுக்கு சிக்கல்.. என்ன சர்வேயில் இப்படி ரிசல்ட் வந்து இருக்கு.. மமதாவிற்கு குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கடந்த 100 நாட்களாக டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மேற்கு வங்க தேர்தலில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என்று ஏபிபி-சி.என்.எக்ஸ் சர்வே தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். 41.53% வாக்குகள் பெறும் என்று ஏபிபி-சி.என்.எக்ஸ் சர்வே நேற்று தெரிவித்தது. மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 34% வாக்குகள் கிடைக்கும், இடதுசாரி-காங். அணிக்கு 19% வாக்குகள் கிடைக்கும் என்று இதில் கூறப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மேற்கு வங்க தேர்தலில் பாஜக பின்னடைவை சந்திக்கும் என்றும் இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

எப்படி

இந்த கருத்து கணிப்பில் விவசாய போராட்டம் மேற்கு வங்க தேர்தலை பாதிக்குமா என்று கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. இதில் 48.65% மக்கள் விவசாய போராட்டம் கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் முக்கியத்துவம் பெறும் என்றுள்ளனர். 35.81% பேர் விவசாய போராட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர். 15.54% பேர் கருத்து இல்லை என்று கூறியுள்ளனர்.

விவசாய போராட்டம்

அதேபோல் நீங்கள் விவசாய போராட்டத்தை அதிகரிக்கிறீர்களா என்று மேற்கு வங்க விவசாயிகளிடம் கேட்கப்பட்டது. இதில் 63% விவசாயிகள் விவசாய போராட்டத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளனர். 20.73% பேர் விவசாய போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளனர். 16.27% பேர் கருத்து இல்லை என்று கூறியுள்ளனர்.

குடியரசுத் தினம்

கடைசியாக குடியரசுத் தினத்தன்று நடந்த செங்கோட்டை கலவரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் சரியா என்று கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. இதில் 39.43% மத்திய அரசு சரியாக செயல்பட்டது என்றுள்ளனர். 45.52% பேர் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை என்று கூறியுள்ளனர். 15.14% பேர் கருத்து இல்லை என்று கூறியுள்ளனர்.

பின்னடைவு

பின்னடைவு

இதன் மூலம் விவசாய போராட்டம் மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு எதிராக திரும்புவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தை எப்படியாவது பிடிக்கலாம் என்ற பிளானில் அமித் ஷா இருக்கிறார். ஆனால் மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்ட இந்த சர்வே திரிணாமுல் காங்கிரஸ் முதல்வர் மமதாவிற்கு ஆதர்வாக் சென்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+