சபரிமலை கோவில் விவகாரத்தில் கேரளா அரசு தலையிடாது- உம்மன்சாண்டி
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நடைமுறையில் கேரள அரசு தலையிடாது என்று கேரளா மாநில உம்மன் சாண்டி விளக்கம் தெரிவித்து உள்ளார். மாநில அரசு தன்னுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் 10 வயது சிறுமிகள் முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை உள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ‘யங் இந்தியா' வக்கீல்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில், ‘ஹேப்பி டூ பிளீட்' என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் தன்னை இணைத்துக் கொண்டு உள்ளது.
இதுபற்றிய விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது தன்னார்வ தொண்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் பாரம்பரியம், நம்பிக்கை என்ற பெயரில் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

இது அரசியல் சாசனம் வகுத்த கொள்கைகளுக்கு எதிரானது. எனவே இந்த சமூக கொடுமையை நீக்கவேண்டும் என்று வாதிட்டார். பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக் காட்டிய அவர், கோவில் போன்ற பொதுவான வழிபாட்டுத் தளங்களில் பெண்கள் நுழைவதை தடுப்பது தங்களுடைய உரிமை என்று கோவில் நிர்வாகம் கூற முடியாது. பாலின பாகுபாடின்றி அனைத்து கோவில்களிலும் வழிபட இந்துக்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாலின சமத்துவம் என்பது அரசியல் சாசனம் வழங்கிய உரிமை ஆகும். எனவே கோவில் நிர்வாகம், கோவிலுக்குள் பெண்கள் நுழைவது மத சம்பந்தமான விவகாரம் என்றும் அதில் தங்களுக்கு உரிமை உள்ளது எனவும் கூற இயலாது என்று குறிப்பிட்டனர். பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
உம்மன் சாண்டி விளக்கம்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளநிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளித்து உள்ள கேரளா முதல்வர் உம்மன் சாண்டி, சபரிமலை கோவில் நடைமுறையில் கேரள அரசு தலையிடாது என்று கூறிஉள்ளார். "மத நம்பிக்கைகள், பாரம்பரிய வழக்கங்களில் கேரள அரசு தலையிடாது. பெண்கள் அனுமதி விவகாரத்தில் சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுப்பதே சரியானது என்றார். மாநில அரசு தன்னுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்துவிட்டது என்றும் உம்மன் சாண்டி கூறிஉள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications