துப்பாக்கி சூடு.. வாகனங்களுக்கு தீ வைப்பு.. வன்முறையில் முடிந்த விஷ்வ ஹிந்து பரிஷத்தின் உபி ஊர்வலம்
உத்தர பிரதேசத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஊர்வலம் மோசமான வன்முறையில் முடிந்து இருக்கிறது.
Recommended Video

லக்னோ: குடியரசு தின விழா அன்று பாஜக ஆளும் மாநிலங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ''மூவர்ண கொடி ஊர்வலம்'' நடத்தியது. இதை ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இதில் உத்தர பிரதேசத்தில் நடந்த ஊர்வலம் கலவரத்தில் முடிந்து இருக்கிறது. பல பேர் இந்த கலவரம் காரணமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்த விசாரணை தற்போது உபியில் தொடங்கி இருக்கிறது. இன்னும் இதுபோன்ற யாத்திரை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

பிரச்சனை
இந்த யாத்திரை முக்கியமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உபி பகுதிகளில் நடத்தப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் இரு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது கொஞ்ச நேரத்தில் உபி முழுக்க கலவரமாக முடிந்து இருக்கிறது.

ஒருவர் மரணம்
இதில் சந்தன் குப்தா என்ற 22 வயது இளைஞர் மரணம் அடைந்தார். இதனால் கலவரத்தின் நிலை மிகவும் மோசமானது. பல கடைகள், கார்கள், பைக்குகள் கொளுத்தப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் துப்பாக்கி சூடு வேறு நடத்தி இருக்கிறார்கள்.

கைது
தற்போது இது சம்பந்தமாக இரு பிரிவை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று யோகி தலைமையிலான உபி அரசு அறிவித்து இருக்கிறது. மரணம் அடைந்த சந்தன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

மீண்டும் நடக்கும்
இந்த கலவரத்திற்கு பின்பு மீண்டும் இதுபோன்ற யாத்திரை நடக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. உபியில் முஸ்லீம்கள் வாழும் அனைத்து பகுதியிலும் மீண்டும் யாத்திரை நடத்துவோம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications