"வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்குவோம், ஜாக்கிரதை.." பரபரப்பைக் கிளப்பிய பாஜக எம்பி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களையும் அடித்து நொறுக்குவோம் என பாஜக எம்பி தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பாஜக கடுமையாக முயன்றது. இதற்காகப் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு பாஜக தலைவர்களும் அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் 3ஆவது முறையாக அங்கு வென்று ஆட்சியை அமைத்தது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றார்.

மேற்கு வங்கம்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அங்குப் பெரியளவில் கலவரம் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டு நடத்திய இந்த கலவரத்தில் பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் குறி வைத்துத் தாக்கப்பட்டதாக பாஜக சாடியது. இந்தச் சூழலில் மேற்கு வங்கத்தில் உள்ள 108 நகராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து திரிணாமு் மற்றும் பாஜக தலைவர்கள் அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சரச்சை பேச்சு
அதன்படி பராக்பூரின் பாஜக எம்பியான அர்ஜுன் சிங், நேற்று தனது சொந்தப் பகுதியான பட்பராவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் கட்சியினர் பூத்களை கைப்பற்ற முடிந்தால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம். வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயலும் திரிணாமுல் கட்சியினர் மீது தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் அடித்து நொறுக்குவோம்" என்று அவர் தெரிவித்தார்.

பாஜக குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சமீபத்தில், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளில் பொதுமக்கள் வாக்களிப்பதைத் தடுத்தால், பாஜக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், மே. வங்கத்தில் போலீசுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் அவர் விமர்சித்து இருந்தார்.

மத்திய படைகள்
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த மத்தியப் படைகளை அனுப்ப வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது இது தொடர்பான பல மனுக்கள் அவர்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கும் பாஜக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications