காவிரி மேலாண்மை வாரியம்.. தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உடனடியாக பலன் தருமா?
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் 6 வார காலம் கெடு விதித்த நிலையில், இதுவரை, அதை செய்யவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை அவசர வழக்காக வரும் திங்கட்கிழமை அன்று விசாரணை நடத்த வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவில், மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே சின்கா மற்றும் நீர்வளத்துறை செயலாளர் யு.பி சிங் ஆகியோர், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த செயல்பாட்டு திட்டத்தை அமல்படுத்த வில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், மத்திய அரசு அதிகாரிகளிடம், சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் அதற்கு பதிலளித்த பிறகு, பரிசீலனை செய்துதான் உத்தரவை பிறப்பிக்கும்.
இதனிடையே, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில், அதன் உத்தரவுக்கு விளக்கம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை காரணம் காண்பித்து, மத்திய அரசால், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதம் செய்ய வாய்ப்புள்ளது.
எப்படி பார்த்தாலும், மத்திய அரசு விரும்பும்படி, வழக்கில் ஒரு முடிவு தெரிய குறைந்தபட்சம், 3 மாதகாலமாவது ஆகிவிடும். அதற்குள் கர்நாடக தேர்தலும் முடிந்துவிடும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications