ஜல்லிக்கட்டு: எல்லோரும் ராஜினாமா செய்யுங்கள்.. விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் மீது மத்திய அரசு கோபம்
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும், அல்லது, எல்லோரும் ராஜினாமா செய்யுங்கள் என்று, இந்திய விலங்குகள் நல வாரிய அதிகாரிகளுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் எச்சரிக்கைவிடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விலங்குகள் நல வாரியம் என்பது, மத்திய அரசின்கீழ் இயங்கினாலும், தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். 22 உறுப்பினர்கல் கொண்ட அந்த வாரியத்தில் சிலர் மட்டுமே அரசு அதிகாரிகள், பெரும்பாலானோர் அதிகாரிகளல்லாதோராகும்.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இவ்வாரியத்தின் தலைவர் டாக்டர்.ஆர்எம்.கர்ப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய கூடாது என்றும், அவ்வாறு செய்வதாக இருந்தால், ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் எச்சரித்ததாக கூறப்படுகிறது. வாரியத்தின் பல உறுப்பினர்களுக்கும், இதேபோன்ற தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக, உறுப்பினர்களில் சிலர் புகார் கூறியுள்ளதாக, ஆங்கில முன்னணி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரை அந்த நாளிதழ் தொடர்புகொண்டபோது, அவர் வடகிழக்கு மாநில சுற்றுப்பயணத்தில் இருப்பதாக தெரிவித்ததாகவும், சுப்ரீம்கோர்ட்டில் இப்படி ஒரு வழக்கு வந்தது தனக்கு தெரியாது என்றும், தனது அலுவலக அதிகாரி மிரட்டியிருக்க மாட்டார் என்றும், பதிலளித்துள்ளார்.
விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா உள்ளிட்டவை இணைந்து ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக தாக்கல் செய்த மனுமீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்துல்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications