டெல்லியில் ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு இயக்கத்தினர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் வாபஸ் !
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி டெல்லியில் ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக் கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தைத் தொடர்ந்து வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படுகிறது ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் விதித்த தடையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வந்தது.

இதில், டெல்லி பல்கலைக்கழகம், ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவர்கள் டெல்லி கலந்துகொண்டுள்ளனர். டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்தப் போராட்டம் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் தொடர்ந்தது.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று போராட்டக்காரர்களை சந்தித்தார். அப்போது இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக ஜல்லிக்கட்டு மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications