2வது திருமணம் செய்த கணவன்.. ஸ்பாட்டுக்கே சென்று கணவனை அடித்து உதைத்த முதல் மனைவி
பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை ஹோட்டலில் வைத்து அடித்து துவைத்து விட்டார் அவரது முதல் மனைவி.
பஞ்சாப்: பஞ்சாபை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று அவரை அடித்து அந்த இடத்தையே துவம்சம் செய்துவிட்டார்.
பஞ்சாபைச் சேர்ந்த சோனு (42) என்பவருக்கும், ராக்கி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் 18 வயதுடைய இளம்பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை சோனு செய்திருந்தார்.

மேலும் பிரபல ஹோட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. முன்னதாக பஞ்சாபியர் முறைப்படி சில சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
தனது கணவரின் திருமணம் குறித்து தகவலறிந்த ராக்கி தனது உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ராக்கியை யாரென்றே தெரியாது என்று சோனு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராக்கி, கணவரை சாலையில் இழுத்து போட்டு அடித்தார். அப்போது விவரம் அறியாமல் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டு மணமகளுக்கு அடி விழுந்தது.தன்னை விவாகரத்து செய்துகொள்ளாமல், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயற்சித்ததாக போலீஸில் ராக்கி புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications