திடீரென மார்பை தொட்ட இளைஞர்.. நிலைகுலைந்த பெண்.. அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்டே.. சபாஷ்..!
அத்துமீறிய இளைஞனுக்கு இளம்பெண் ஒருவர் சரியான பாடம் புகட்டி உள்ளார்
டிஸ்பூர்: திடீரென இளம்பெண்ணின் மார்பகங்களை ஒரு இளைஞர் தொட்டு தகாத முறையில் நடந்து கொள்ள பார்த்தார்.. ஒருநிமிஷம் எதுவுமே புரியாமல் தடுமாறிய அந்த இளம்பெண், அடுத்து செய்த காரியம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
அந்த பெண் அசாமின் கவுகாத்தியை சேர்ந்தவர்.. பெயர் பாவனா காஷ்யப்.. கடந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் இந்த சம்பவம் நடந்துள்ளது..
அன்றைய தினம், ஆள்அரவமற்ற ஒதுக்குப்புறமான சாலையில் அந்த பெண் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்..

அட்ரஸ்
அப்போது எதிரே பைக்கில் ஒரு இளைஞர் வந்துள்ளார்.. பாவனாவை பார்த்ததும், பைக்கை ஸ்லோ செய்துவிட்டு, அருகில் வந்து அட்ரஸ் கேட்டிருக்கிறார். அந்த அட்ரஸ் தனக்கு தெரியாது, வேற யார்கிட்டயாவது கேளுங்க என்று சொன்னார் பாவனா.. ஆனால், அந்த இளைஞர் திடீரென பாவனாவின் மார்பகங்களை தொட்டு, அறுவறுப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்.. இதனால் பதறியும் துடிதுடித்தும், அதிர்ந்தும் போனார் பாவனா.

தடுமாற்றம்
பிறகு அந்த இளைஞர் பைக்கை எடுத்து கிளம்ப தயாரானார்.. அப்போது பாவனா, தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த பைக்கின் பின் டயரை அப்படியே அலேக்காக தூக்கியிருக்கிறார்.. இதனால் அந்த இளைஞரால் பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.. கிட்டத்தட்ட இப்படியே சுமார் 30 செகண்டுகள் பைக்கை தூக்கி கொண்டே நின்றிருக்கிறார்.. அப்படியே பக்கத்தில் இருந்த ஒரு சாக்கடையில், பைக்குடன் இளைஞரை குப்புற தள்ளிவிட்டார்.. அந்த நபர் சாக்கடையில் சிக்கி கொண்டார்.. அதனால், உடனடியாக அங்கிருந்து அவரால் தப்பவும் முடியவில்லை..

பாவனா
அந்த சமயத்தில் அந்த வழியாக ஒருசிலர் வந்தவர்கள்தான், பாவனாவுக்கு உதவியிருக்கிறார்கள்.. அதில் ஒருவர்தான் இதை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.. அந்த வீடியோவை பாவனா, தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.. தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழலையும், அதை எப்படி எதிர்கொண்டேன் என்பதையும் விளக்கி உள்ளார்.. அவமானம், அசிங்கம் என்று ஒதுங்கி கொள்ளாமல், நெருக்கடி, ஆபத்து சூழலிலும் இளம்பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக அந்த பதிவு அமைந்துள்ளது.

வீடியோ
அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட நபர் யார் என்று பாவனாவே விசாரித்துள்ளார்.. அந்த இளைஞர் பெயர் மதுசனா ராஜ்குமார்.. கவுகாத்தியின் பஞ்சபாரி பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.. பாவனாவை பார்த்ததும் பதறிப்போய்விட்டார்.. தெரியாமல் செய்துட்டேன்.. ப்ளீஸ்.. என்னை மன்னித்துவிடு என்று கெஞ்சி உள்ளார்.. ஆனாலும் பாவனா விடவில்லை.. போலீசுக்கு விஷயத்தை சொல்லி அவர்களை வரவழைத்து, மதுசனா ராஜ்குமாரை அவர்களிடம் ஒப்படைத்தார் பாவனா...!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications