ஓடும் காரில் பெண் பயணியை பார்த்தபடியே சுய இன்பம் செய்த கால் டாக்சி டிரைவர்!
டெல்லி: தனியார் கார் நிறுவன டிரைவர் வண்டி ஓட்டும்போதே, ஒருமாதிரியாக சிரித்தபடி, சுய இன்பம் அனுபவித்தார் என்று காரில் பயணித்த இளம் பெண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியின் சகீத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் சம்பவத்தன்று, பரிதாபாத்துக்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். 'டாக்சி பார் சுயர்' நிறுவனத்தில் இருந்து டாக்சி வந்துள்ளது.
இந்நிலையில், பயணத்தின்போது பயங்கர அனுபவத்தை சந்தித்துள்ளார் அப்பெண். இதுகுறித்து இளம் பெண் கூறியதாவது: காரை தேவேந்திரகுமார் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். நான் சென்று சேர வேண்டிய பகுதிக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக இருந்து அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.

வண்டியை வேகமாக ஓட்டினார், பொறுமை இழந்தவராக காணப்பட்டார், தனது வாய்க்குள் ஏதோ முனகினார். நான் எப்போதும் காரில் பயணிக்கும்போது செல்போனில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அதேபோல பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், டிரைவர் வண்டியை ஓட்டியபடியே சுய இன்பம் செய்வதை அப்போதுதான் பார்த்தேன். நான் பார்ப்பதை கவனித்ததும், என்னை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தார். வண்டியின் கட்டுப்பாடு அவரிடம் இல்லை.
நான் ஜன்னல் கண்ணாடிகளை கீழே இறக்கிவிட்டு வெளியே பார்த்தபடி பல்லை கடித்துக்கொண்டே பயணித்தேன். காரை விட்டு இறங்கியதும், கஸ்டமர் கேருக்கு புகார் அளித்தேன். இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார். இதுகுறித்து சம்மந்தப்பட்ட டாக்சி நிறுவனத்திடம் கேட்டபோது, இந்த டிரைவர் மீது இதற்கு முன்பாக புகார் வந்ததில்லை. இப்போது, வந்த புகாரை தொடர்ந்து அவர் பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications