பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதிரடி
பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய தடை நீண்ட காலமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் மீது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

குறைந்தவர்கள் இல்லை
முன்னதாக தீர்ப்பை வாசிக்க தொடங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை கூறினார். அவர் கூறியதாவது,
பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை.
[சபரிமலை.. 4 ஆண் நீதிபதிகள் பெண்களுக்கு பச்சைக்கொடி.. பெண் நீதிபதி எதிர்ப்பு! ]

ஆண்களுக்கு சமமானவர்கள்
நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில் பெண்களை பலவீனமானவர்களாக கருதக்கூடாது. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்.

பாரபட்சம் காட்டக்கூடாது
பெண்களை ஒரு பக்கம் கடவுளாக மதிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் கட்டுப்பாடும் விதிக்கிறார்கள் . கடவுளை வழிபடுவதில் ஆண் பெண் என் பாரபட்சம் காட்டக்கூடாது.

தடை நீக்கம்
பெண்கள் கோவிலுக்குள் செல்ல தடைவிதிப்பது சட்ட விரோதம் என்று கூறிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.

மகிழ்ச்சி
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பெண்கள் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பல இடங்களில் இனிப்புகள் கொடுத்து பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications