காவல் நிலையத்திலேயே பீர் குடித்து விட்டு ரகளை செய்த இளம் பெண்... சமாளிக்க முடியாமல் திணறிய போலீசார்
மும்பை : தீவிரவாதிகள், ரவுடிகளையெல்லாம் களையெடுத்து சமாளித்து வரும் மும்பை போலீசார் காவல் நிலையத்திலேயே பீர் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்ணை சமாளிக்க முடியாமல் திணறிப் போயினர்.
ஹோட்டல் ஒன்றின் முன்பு நள்ளிரவில் மதுபோதையில் 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர் அதனை கேட்கவில்லை.

இதையடுத்து அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், அறிவுரை கூறினர். இருப்பினும் அவர் தனது கையில் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு குடித்துக்கொண்டே உளறியபடி இருந்தார்.
போதையில் இருந்த அவருக்கு என்ன சொன்னாலும் புரியாது என்பதால் அவரின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்து வைத்த போலீசார், காலையில் 1,200 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக மூத்த ஆய்வாளர் ராஜாராம் தெரிவித்தார்.
முன்னதாக அவர் போதையில் இருந்தபோது மாறி மாறி பேசியுள்ளார். தனது பெயர் சுனிதா யாதவ் என்றும், தான் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், தான் ஒரு அனாதை என்றும் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications