உ.பி.யில் கொடூரம்: பெண்ணைப் பலாத்காரம் செய்து மரத்தில் நிர்வாணமாக கட்டி வைத்த அயோக்கியர்கள்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் வயலுக்கு வேலைக்குச் சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், அவரை உயிருடன் நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் கன்னூஜ் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளது செங்கபூர்வா கிராமம். இண்டர்கார் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் வரும் இந்தக் கிராமத்தில், சம்பவத்தன்று 33 வயது பெண் ஒருவர் வயல் வேலைக்கு சென்றார். அப்போது அந்த கிராமத் தலைவரின் மகனான ஆசிரியர் சர்வேஷ் யாதவ் மற்றும் 2 பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், அப்பெண்ணின் உடைகளை மரத்தின் உச்சிக்கு தூக்கி எறிந்த அந்தக் கும்பல், நிர்வாண நிலையில் அவரை அதே மரத்தில் கட்டி வைத்து விட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் ஊர் மக்களால் மீட்கப் பட்ட அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில் கிராமத் தலைவரின் மகன் சர்வேஷ் மட்டுமே தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்துள்ள புகாரில் சர்வேஷுடன் இணைந்து மேலும் இருவர் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். தற்போது சர்வேஷை கைது செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மருத்துவ பரிசோதனைக்காக பாதிக்கப்பட்ட அப்பெண்ணை கான்பூருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
கன்னூஜ் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் சொந்த தொகுதி என்பது குறிப்பிட தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்திரப்பிரதேசத்தில் இரவில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற சகோதரிகள் இருவர் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications