நித்தி- ரஞ்சிதா பற்றிய புதிய வீடியோ- பிடதி ஆசிரமத்தில் 'மர்ம'மாக இறந்த பெண்ணின் தாய் 'திடுக்' தகவல்
பெங்களூர்: சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சா இருவர் குறித்த இதுவரை வெளிவராத புதிய 'வீடியோவை' தன் மகள் வைத்திருந்ததுதான் தன் மகளின் மர்ம மரணத்துக்குக் காரணம் என்று திருச்சி பெண்ணின் தாய் ஜான்சிராணி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் - ஜான்சிராணி தம்தியினர். இவர்களது 24 வயது மகள் சங்கீதா. பி.சி.ஏ., படித்த இவர் கர்நாடகா மாநிலம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார்.

இந்நிலையில் கடந்த, 28-ந் தேதி, ஆசிரமத்தில் மர்மமாக இறந்தார். தனது மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஜான்சி ராணி பெங்களுரு ராம்நகரம் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் பெங்களுருவில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நித்தியானந்தா- ரஞ்சிதா வீடியோ ஏற்கன்வே வெளியானது. அதே மாதிரி மற்றொரு வீடியோவை எனது மகள் தனது லேப்டாப் மற்றும் பென் டிரைவில் வைத்திருந்தார். அதனுடன் ஊருக்கு வந்தாள்.
சங்கீதா ஊருக்கு வந்தவுடன் பிடதி ஆசிரமத்தில் இருந்து அம்சானந்தா மற்றும் சிலர் வந்தனர். அவர்கள் சங்கீதாவின் லேப்டாப் மற்றும் பென்டிரைவை வாங்கி அதில் இருந்தவற்றை அழித்தனர். எங்களை நித்தியானந்தாவிடம் அழைத்துச் சென்றனர்.
அங்கு நித்தியானந்தா என்னிடம், நானும் ரஞ்சிதாவும் இருந்த வீடியோவை வெளியிட்டாங்க. அந்த வீடியோ வைத்தே என்னை ஒண்ணும் பண்ண முடியல. உன் பொண்ணு லேப்டாப்ல இருக்கும் வீடியோவை வைத்து என்ன பண்ண முடியும் என்று மிரட்டினார்.
என் மகளை தனிமை சிறையில் அவர் அடைத்தார். நடிகை ரஞ்சிதா என் மகளை பளார் என்று அறைந்தார். நித்தியானந்தாவின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகத்துக்கு காட்டாமல் ஓய மாட்டேன். நித்தியானந்தா தவறான செய்கையில் ஈடுபடுகிறார் என்பதற்கான நிறைய ஆதாங்கள் என்னிடம் உள்ளது.
அதை நான் இப்போது சொன்னால் ஆசிரமத்தில் தங்கியிருக்கக் கூடிய எனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோருக்கும் பாதிப்பு வரும். அதனால் இப்போது அதை நான் சொல்லவில்லை. விரைவில் இதுபற்றிய உண்மைகளை வெளியிடுவேன்.
இவ்வாறு ஜான்சிராணி கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications