சந்தேஷ்காலி சர்ச்சை.. பாஜகவினர் தான் புகார் கொடுக்க மிரட்டினார்கள்! பெண் பரபர குற்றச்சாட்டு!
கொல்கத்தா: மேற்கு வங்கம் சந்தேஷ்காலி விவகாரத்தில் திரிணாமுல் கட்சியினருக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்த பெண் ஒருவர் தனது புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். மட்டுமல்லாது புகார் கொடுக்க பாஜகவினர் தான் வற்புறுத்தியாகவும் கூறியுள்ளார். இது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி எனும் பகுதியை, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த பிரமுகர் ஷாஜகான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் ரேஷன் பொருட்களை கடத்துவது, நிலங்களை அபகரிப்பது என தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருந்ததாகவும், இதற்கெல்லாம் உச்சமாக பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஷாஜகான் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேஷ்காலி பகுதியை சேர்ந்த பெண்கள் போராட்டத்திலும் இறங்கினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணையத்தின் நிர்வாகிகள், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பரிந்துரைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது 3 பெண்கள் பாலியல் புகாரை அளித்திருந்தனர். இதில் ஒரு பெண் தனது புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். இது குறித்து கூறிய அவர், "மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற்று தருவதாக பாஜகவினர் என்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினர். அதன் பின்னர் என்னை மிரட்டி திரிணாமுல் நிர்வாகிகளுக்கு எதிராக புகாரை அளிக்க தூண்டினர். எனவேதான் நான் புகார் அளித்தேன்.
மற்றபடி எனக்கு பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடக்கவில்லை. எனவே எனது புகாரை வாபஸ் பெற்றிருக்கிறேன். புகாரை திரும்ப பெற்றதால் எனக்கு பாஜகவினரிடமிருந்து அச்சுறுத்தல் வந்திருக்கிறது. இதிலிருந்து உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக சந்தேஷ்காலி விவகாரம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் ஸ்டிங் ஆப்ரேஷனை நடத்தி வீடியோவை வெளியிட்டிருந்தது. அதில் உள்ளூர் பாஜக பிரமுகர், திரிணாமுல் நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக கூறியதாக தகவல்கள் கசிந்தன. இதனை தொடர்ந்து தற்போது புகார் கொடுத்த பெண்ணே புகாரை வாபஸ் பெற்றிருப்பது பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இது குறித்து பாஜகவிற்கு திரிணாமுல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மையை உரக்க பேசியதற்காக அவர்களை பாஜக மிரட்டுகிறது. தங்கள் அரசியல் பேராசைக்காக நம் தாய், சகோதரிகளின் மானத்தை வெட்கமின்றி மிதித்து, வஞ்சக வலைகளை பின்னும் இந்தக் கட்சி இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்?" என திரிணாமுல் எம்பி சுஷ்மிதா தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications