குடிபோதையில் தவறாக நடக்க முயன்ற இளைஞர்.. செருப்பாலேயே அடித்து விரட்டிய பெண்கள்!
டெல்லி அருகே பப் பெண் உழியரிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை சக பெண்கள் செருப்பால் அடித்து விரட்டினர்.
டெல்லி: குருகிராம் பகுதியில் பப்பில் பணிபுரியும் பெண்ணிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பெண்கள் அவரை பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடித்து விரட்டினர்.
தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் ஆட்டோவில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய் 3 பேர் கொண்ட கும்பல் அவரது 9 மாத பெண் குழந்தையும் வீசியெறிந்து கொன்றது.
இந்நிலையில் டெல்லியில் பப் ஊழியரிடம் குடிபோதையில் இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குருகானில் பணிபுரியும் சில பெண்கள் எம்ஜி சாலையில் சாலையில் பேருந்துக்காக நின்றுக் கொண்டிருந்தனர்.

போதையில் அநாகரிகமாக..
அப்போது ஃபுல் போதையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் அங்கு நின்றிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். அவரது கையை பிடித்து இழுத்தும் ஆடையை பிடித்தும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

செருப்பால் அடித்து விரட்டல்
இதனைக் கண்ட அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அந்த நபரை பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடித்து விரட்டினர். அப்போது அங்கு போலீசார் யாரும் இல்லை என கூறப்படுகிறது.

வைரலாகும் வீடியாகும்
இளைஞரை பெண்கள் செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணை ஆணையர் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கான்ஸ்டப்ள்களை சாதாரண உடையில் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவத்துள்ளார்.

எப்ஃஐஆர் பதிவு செய்ய உத்தரவு
மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால் உடனடியாக எப்ஃஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். டெல்லியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவது பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications