12,000 அறிவித்த பாஜக! கூடுதலாக 3,000 சேர்த்த காங்.. சத்தீஷ்கரில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்
ராய்ப்பூர்: சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து கடந்த 2000 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவானது. 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கரில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் அந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. அதன்பிறகு 2008 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் தொடர்ந்தது.
அப்போதும் பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 38 - இடங்களில் வென்றது. முந்தைய தேர்தலை விட ஒரு இடம் அதிகமாக காங்கிரஸ் வென்றது. 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது. ஆனால் 2018-ல் நிலைமை தலைகீழாக மாறியது. 2018 தேர்தலில் பாஜக மிக மோசமாக தோல்வியை சந்தித்தது. 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்தது. பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 7 இடங்களில் தான் வெற்றி பெற்றன.
இதனால், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வியூகத்துடன் பாஜக இந்த தேர்தலை எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியோ ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது. 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் 17 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. சத்தீஷ்கரில் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு வருடத்திற்கு ரூ.12 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில், சத்தீஷ்கரில் வெற்றி பெற்று மீண்டு ஆட்சி அமைத்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் பூபேஷ் பகேல் வாக்குறுதி அளித்துள்ளார்.
ராய்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பூபேஷ் பகேல் கூறுகையில், புனிதமான தீபாவளி தினத்தன்று லக்ஷ்மி கடவுளின் ஆசிர்வாதத்துடன் பெண்களின் வாழ்க்கை தரம் மேம்பட மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பைதான் இன்று வெளியிட இருக்கிறேன். சத்தீஷ்கரில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் மாநிலத்தில் உள்ள மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். மகளிரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் வரவு வைக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications