சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு உதவி செய்ய மாட்டோம்: ஆர்.எஸ்.எஸ்
நாக்பூர்: மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களில் தங்களது உதவியை எதிர்பார்க்க வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவிடம் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உதவி செய்தது. அதே நேரத்தில் மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ்.விருப்பத்தை மீறி அமித்ஷா பாஜக தலைவராக்கப்பட்டார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு இன்று அமித்ஷா சென்றார். அங்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, சட்டசபை தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உதவியை எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று அமித்ஷாவிடம் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் டெல்லியில் பெரும்பான்மை பெறாத நிலையில் பாஜக ஆட்சி அமைக்கக் கூடாது; மீண்டும் தேர்தலைதான் சந்திக்க வேண்டும் என்றும் அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்கள் அறிவுறுத்தியும் இருக்கின்றனர்.
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு












Click it and Unblock the Notifications