For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உஷாரா இருங்க! 'பாஜகவை வசமா சிக்க வைக்கலாம்'.. அமைச்சர்களை அலர்ட் செய்த மம்தா.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்த கேபினட் கூட்டத்தில் அமைச்சர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ''மிகவும் கவனமாக பணியாற்றுங்கள். ஒரு நிமிடம் கூட அசந்துவிடாமல் எப்போதும் கவனமாக இருங்கள்.. பாஜனதாவினரை சிக்க வைக்கலாம்" என்று கூறியுள்ளார்.

Recommended Video

    மோடியை தோற்கடிக்கும் நம்பிக்கையை பீகார் தந்திருக்கிறது- லஷ்மி சுப்ரமணியன்

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார் மம்தா பானர்ஜி.

    ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 4 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டன. மேலும் புதுமுகங்கள் 8 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.

    அதிர்ச்சியில் மம்தா.. புறக்கணித்த திரிணாமூல்! மீறிய எம்பிக்கள் - துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்புஅதிர்ச்சியில் மம்தா.. புறக்கணித்த திரிணாமூல்! மீறிய எம்பிக்கள் - துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு

     கேபினட் கூட்டம்

    கேபினட் கூட்டம்

    இதில் பாஜகவில் இருந்து விலகி சென்ற பாபுல் சுப்ரியோவும் அடங்குவார். பாபுல் சுப்ரியோவுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சரவை மாற்றி அமைத்த பிறகு முதல் முறையாக கேபினட் கூட்டத்தை மம்தா பானர்ஜி கூட்டினார். அப்போது அமைச்சர்கள் முன்னுரிமை அளித்து செயலாற்ற வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார். குறிப்பாக அமைச்சர்கள், தங்களின் வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

     படிக்காமல் கையெழுத்து போடக்கூடாது

    படிக்காமல் கையெழுத்து போடக்கூடாது


    வருமான வரி தாக்கல் செய்த பிறகு, வருமான வரி ஆணையம் அளிக்கும் ஆவணத்தின் நகலை தலைமைச்செயலாளர் அலுவலகத்திலும் கொடுக்க வேண்டும் என்றார். மேலும், ஒவ்வொரு அமைச்சர்களின் செயல்பாடுகளையும் தனித்தனியாக கண்காணிப்பேன் என்றும் மம்தா பானர்ஜி எச்சரித்தார். இதற்கு அடுத்தபடியாக மம்தா பானர்ஜி விடுத்த அறிவுறுத்தல்தான் ஹைலட்ஸ். மம்தா பானர்ஜி அமைச்சர்களிடம் கூறுகையில், ''அமைச்சர்கள் எந்த ஒரு கோப்புகளையும் முழுக்க படிக்காமல் கையெழுத்து போடக்கூடாது.

     கவனமாக பணியாற்றுங்கள்

    கவனமாக பணியாற்றுங்கள்

    எதுவும் எழுதப்படாத வெள்ளை காகிதங்களில் கையெழுத்திடக்கூடாது. கையெழுத்துக்கு மேலேயும் கீழேயும் எதையும் எழுதி வைத்து விடும் அளவுக்கு இடம் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருப்பதை உறுதி செய்தே கையெழுத்திட வேண்டும். பாஜக ஒரு பொறியை வைத்துள்ளது. ஸ்டிங் ஆப்ரஷேன் நடத்துவதற்காக 500 பேரை பல்வேறு வழிகளிலும் நியமித்து இருக்கிறார்கள். எனவே, மிகவும் கவனமாக பணியாற்றுங்கள். ஒரு நிமிடம் கூட அசந்துவிடாமல் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அப்போது தான் பாஜனதாவினரை சிக்க வைக்க முடியும்" என்றார்.

     போலீஸ் பைலட் வாகனத்துடன் வரக்கூடாது

    போலீஸ் பைலட் வாகனத்துடன் வரக்கூடாது

    தொடர்ந்து அமைச்சர்களின் கார்களில் சிவப்பு மற்றும் புளூ நிறங்களில் விளக்குகள் இருக்கூடாது என்ற விதியை நினைவுபடுத்திய மம்தா பானர்ஜி, எந்த ஒரு அமைச்சரும் கொல்கத்தா நகருக்குள் போலீஸ் பைலட் வாகனத்துடன் வரக்கூடாது என்றும், வெளி மாவட்ட அமைச்சர்கள் கொல்கத்தா நகருக்குள் வரும் போது பைலட் வாகனத்தை விட்டு விட்டு விட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
    கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக பார்த்தா சட்டரிஜி சிறையில் உள்ள நிலையில், மம்தா இப்படி சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.

    English summary
    Chief Minister Mamata Banerjee told ministers at a cabinet meeting in West Bengal, "Work very carefully. Always be careful not to panic even for a minute.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X