பத்திரமாக வெளியே வந்த 41 தொழிலாளர்கள்! இதுதான் தீபாவளி.. பட்டாசு வெடித்து உள்ளூர் மக்கள் கொண்டாட்டம்
டேராடூன்: சுரங்கத்தில் இருந்து ஒவ்வொரு தொழிலாளர்களாக அரை மணி நேரத்திற்குள் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். 17 நாட்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தீபாவளியை போல் கொண்டாடி வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்த உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி முதலில் அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.
எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்: அதில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக மாற்று வழியில் மீட்பு பணிகள் நடந்தது. இந்த பணியிலும் தாமதம் ஏற்பட்டது. எனினும் சிறிய குழாய் ஒன்றை சுரங்கத்திற்குள் அனுப்பி அதன் மூலம் தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் மூலமாக அனுப்பப்பட்டு வந்தது. இந்த பணியில் தமிழக பணியாளர்களின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிளான் 'பி' நடவடிக்கையாக, சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாக துளையிடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கிடையில் சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கியது. அதற்காக "எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்" எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்றும் துளையிடும் அனுபவம் வாய்ந்த 6 சுரங்கப்பணியாளர்கள் குகைப்பகுதிக்கு வந்தனர்
வெளியே வந்த தொழிலாளர்கள்: சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கி நடந்து வந்தது. 17- வது நாளாக மீட்பு பணிகள் சுரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில் பணி இறுதி கட்டத்தை எட்டியது. இதையடுத்து மீட்பு குழு வீரர்கள் குழாய் வழியாக உள்ளே சென்று தொழிலாளர்களை மீட்டு வர சுரங்கத்திற்குள் இறங்கினர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் ஒவ்வொருவராக அவர்கள் வெளியே அனுப்பி வைத்தனர்.
அதன்படி இரவு 8 மணியளவில் முதல் 2 தொழிலாளர்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு தொழிலாளர்களாக மீட்பு குழுவினர் வெளியே அனுப்பி வைத்தனர். 17 நாட்களாக உள்ளே சிக்கி தவித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தற்போது ஒவ்வொருவராக வெளியே வர தொடங்கியதும் அங்கிருந்த மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
41 பேரும் மீட்பு: ஒவ்வொரு தொழிலாளியாக வெளியே வர அவர்களை உடனடியாக தயார் நிலையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து 8.30 மணியளவில் அனைத்து தொழிலாளர்களும் அதாவது சுரங்கத்திற்குள் சிக்கித்தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் அங்கு கூடியிருந்த பலரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
மக்கள் கொண்டாட்டம்: ஒவ்வொரு தொழிலாளர்களும் மீட்கப்படும் போது உள்ளூர் மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் அங்குள்ள மக்கள் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இது தான் தீபாவளி என்றும் கொண்டாட தொடங்கினர். 17 நாட்களாக சுமார் 410 மணி நேரம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications