410 மணி நேரம் போராடி சாதித்த மீட்புக் குழு.. சுரங்கத்தில் இருந்து ஒவ்வொரு தொழிலாளர்களாக மீட்பு
டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரும் சுரங்கத்திற்குள் இருந்து குழாய் வழியாக ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டனர். 17 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததும், உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர்.
அதன்படி அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது. எனினும், மீட்பு பணியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்து. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. தொழிலாளர்களை மீட்கும் பணி 2 வாரத்துக்கு மேலாக நீடித்து வந்தது.
துளையிடும் அமெரிக்க "ஆகர்" எந்திரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சினைகள், இடிபாடுகளின் இடையூறுகளால் துளையிடும் பணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்தது. பிளான் 'பி' நடவடிக்கையாக, சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாக துளையிடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கிடையில் சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கியது.
அதற்காக "எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்" எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்றும் துளையிடும் அனுபவம் வாய்ந்த 6 சுரங்கப்பணியாளர்கள் குகைப்பகுதிக்கு வந்தனர் சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கி நடந்து வந்தது. 17- வது நாளாக மீட்பு பணிகள் சுரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில் பணி இறுதி கட்டத்தை எட்டியது.
இதையடுத்து மீட்பு குழு வீரர்கள் குழாய் வழியாக உள்ளே சென்று தொழிலளர்களை மீட்டு கொண்டு வர இறங்கினர். தொடர்ந்து தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி 17 நாட்களாக உள்ளே சிக்கி தவித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக என அரை மணி நேரத்திற்குள் 41 தொழிலாளர்களும் வெளியே வந்தனர்.
வெளியே வந்த தொழிலாளர்கள் உடனடியாக தயார் நிலையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 17 நாட்களாக சுமார் 410 மணி நேரம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் 41 பேரும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் பல்வேறு மீட்புக்குழுவினரும் சாதித்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications