”வாழ்வாங்கு வாழ்ந்த அப்துல் கலாம்”- உலகத் தலைவர்கள் பலரும் அஞ்சலி!
டெல்லி: மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியா-அமெரிக்கா இடையேயான வானியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பிற்கு கலாம் பெரும் பங்காற்றியவர். இந்தியர்களின் உத்வேகம் கலாம்" என்று புகழ்ந்துள்ளார்.

தெற்காசிய இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்தவர் கலாம் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லட்சக்கணக்கான மக்களுக்கு மட்டுமல்லாமல் தனக்கும் கலாம் உந்து சக்தியாக இருந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
சிறந்த நண்பரை நேபாளம் இழந்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா குறிப்பிட்டுள்ளார். கலாமின் மறைவு அறிவியல் சமுதாயத்திற்கு பேரிழப்பு என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். இந்தியாவின் குறிப்பிடத் தக்க குடியரசுத் தலைவராக, அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர் அப்துல் கலாம் என பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே புகழ்ந்துள்ளார்.
இதேபோல், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங்கும் அப்துல் கலாம் மறைவிற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications