காஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் சென்ற பாஜக முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குடிமக்கள் குழு என்ற தன்னார்வ தொண்டு குழுவை சேர்ந்தவர்களுடன் யஷ்வந்த் சின்ஹா காஷ்மீருக்கு சென்றிருந்தார். இவரை தவிர, இந்த குழுவில் கபில் கக், பாரத் புஷன் மற்றும் சுஷோபா பர்னாட் ஆகியோரும் இருந்தநர்.

இன்று காலை 11:30 மணிக்கு விமானம், தரையிறங்கியதும், அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்டதும், யஷ்வந்த் சின்ஹாவிடம் டெல்லிக்கு திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தபபட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். விமான நிலையத்திலிருந்து வேறு எங்கும் போக முடியாது என அவர் உறுதியாக கூறிவிட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் பாஜக சீனியர் தலைவரான யஷ்வந்த் சின்ஹா தற்போதைய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தவர். பொருளாதார கொள்கைகளை கடுமையாக சாடியவர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட, 370 வது பிரிவை ரத்து செய்ததற்காக மத்திய அரசின் நடவடிக்கையை யஷ்வந்த் சின்ஹா கண்டித்துள்ளார். மேலும் இது ஜம்மு-காஷ்மீர் மக்களை பிற இந்தியர்களிடமிருந்து மேலும் அந்நியப்படுத்தும் என்று கூறியிருந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications