எந்த........ வேண்டுமானாலும் முதல்வராக வரலாம்: 'இந்தி' கெட்ட வார்த்தையில் கொந்தளித்த சின்ஹா
ராய்ப்பூர்: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்தி கெட்ட வார்த்தையை பகிரங்கமாக பயன்படுத்தி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா அண்மைக்காலமாக ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசியலை குறி வைத்து செயல்பட்டு வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்வாரிய அதிகாரியைக் கட்டிப்போட்டு உதைத்த வழக்கில் ஜாமீன் கேட்க மறுத்து சிறையிலேயே இருந்தார்.

பின்னர் அத்வானி நேரில் சந்தித்து கேட்டதைத் தொடர்ந்து ஜாமீன் வாங்கி வெளியே வந்தார். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முழு தகுதியானவர் என்று அத்வானி புகழாரம் சூட்டினார். இந்த உள்நோக்கத்துடனேயே ஜார்க்கண்ட் மாநில அரசியலில் சின்ஹா ஈடுபட்டு வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசியலிலும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார் யஷ்வந்த் சின்ஹா. அம்மாநில தலைநகர் ராய்ப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, நீங்கள் சத்தீஸ்கர் மாநில முதல்வராவீர்களா? என்று கேட்கப்பட்டது. அப்போது இந்தியில் ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி எந்த ஒரு ... வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று கூறினார்.
இந்த பதிலைக் கேட்ட செய்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். யஷ்வந்த் சின்ஹாவின் இப்பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications