காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் இடைக்கால அரசில் ஆலோசகர் பதவி!
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாதியான சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலின் மனைவிக்கு பாகிஸ்தான் இடைக்கால அரசில் ஆலோசகர் என்ற நிலையில் அமைச்சருக்கு இணையான பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஒரு தனி தேசிய இனம்; தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தனிநாடு என விடுதலை பெற வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் கொள்கை. இதன் தலைவர் யாசின் மாலின்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் யாசின் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் யாசின் மாலிக் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் மீதான வழக்குகளில் வீடியோ கான்பரன்ஸில் மட்டுமே ஆஜராகி வந்தார். திடீரென உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் யாசின் மாலிக் ஆஜர்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதனால் சிறைத் துறை அதிகாரிகள் இடைநீக்கமும் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசில் யாசின் மாலிக் மனைவிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் காகர் ஆலோசகராக முஷால் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாசின் மாலிக்கின் மனைவி. இடைக்கால பிரதமரின் ஆலோசகர் என்றாலும் அமைச்சருக்கு இணையான தகுதி பெற்றவர். முஷால் ஹூசைனின் இந்த நியமனம் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
யாசின் மாலிக்- முஷால் ஹூசைன் திருமணம் 2009-ம் ஆண்டு நடைபெற்றது. 2014-ம் ஆண்டு யாசின் மாலிக் மனைவி என்ற அடிப்படையில் முஷால் ஹூசைன் இரு முறை இந்தியா வருகை தந்தார். 2015-ம் ஆண்டு முஷால் ஹூசைனுக்கு விசா மறுக்கப்பட்டது. அப்போது மத்திய அரசை விமர்சித்து முஷால் ஹூசைன் பேட்டி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications