மீண்டும் வந்தார் எதியூரப்பா... கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமனம்
பெங்களூர்: முன்னாள் கர்நாடக முதல்வர் பி.எஸ். எதியூரப்பா அம்மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் பி.எஸ். எதியூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி துவங்கியது.
அடுத்த தலைவராக யாரை பாஜக மேலிடம் நியமிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் எதியூரப்பாவின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையின் இந்த முடிவை கர்நாடக மாநிலத்தில் உள்ள அக்கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

எதியூரப்பா கட்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் என பாஜக தலைவர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றி பெற காரணமாக இருந்தவர் எதியூரப்பா. பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் அங்கிருந்து வெளியேறி கேஜேபி என்ற புதிய கட்சியை துவங்கினார்.
2014ம் ஆண்டு தனது கேஜேபி கட்சியை கலைத்துவிட்டு பாஜக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். சொந்த இடத்திற்கே திரும்பி வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் கட்சி பணியாற்ற விரும்புவதாக எதியூரப்பா பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் கூறியுள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications