போலீஸ், அரசு வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள்: தேர்தல் ஆணையரிடம் டி.ஆர். பாலு புகார்

திமுக எம்.பி.யும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு தலைமை தேர்தல் ஆணையரை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
திமுகவின் பிரசாரத்தைத் தடுக்கும் நோக்கில் அதிமுக அமைச்சர்கள் காவல் நிலையங்களில் அமர்ந்து கொண்டு திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.
மேலும் பண நோட்டுக்கள் மற்றும் இலவசப் பொருட்களை ஆளும் கட்சி சார்பில் விநியோகம் செய்வதற்கு தமிழக காவல் துறை மற்றும் அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் இந்தத் தொகுதியில் அரசு வாகனங்களை சோதனை செய்வதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை நியமிக்க வேண்டும்.
மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆளும் கட்சியினரின் ஆணையின் படி நடக்கிறார்கள். எனவே, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் வகையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வீடியோ பதிவுகள் நடைபெற வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் துணை ராணுவ படையை நியமிக்க வேண்டும். ஏற்காடு தொகுதிக்குள் நுழையும் வழிகள் மற்றும் வெளியேறும் வழிகளில் மத்திய துணை ராணுவ படையினரால் சோதனைச் சாவடிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சேலம் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் வேட்பாளரின் பிரதிநிதிகள் வாக்களிப்பு மையங்களை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் இணையம் வழியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications