"நீங்கள் மோடிக்கு மட்டும்தான் சபாநாயகரா?": லோக்சபாவில் திரினமுல் எம்.பி ஆக்ரோஷ பேச்சு
டெல்லி: நீங்கள் மோடிக்கு மட்டும் சபாநாயகர் கிடையாது என்று லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனை பார்த்து கூறிய திரினமுல் காங்கிரஸ் எம்.பி., கடும் எதிர்ப்பு, காரணமாக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்கு அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டதாக கூறி, நாடாளுமன்றத்தில் திரினமுல் காங்கிரஸ் கட்சியினர் நேற்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது பாஜக எம்.பிக்களுக்கும், அவர்களுக்கும் லேசான கைகலப்பு ஏற்பட்டது.

இதை கண்டித்து இன்று லோக்சபாவில், திரினமுல் எம்.பிக்கள் பதாகைகளை ஏந்தியபடி அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக கோஷமிட்டனர். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டித்தார். பதாகைகளை நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவரக்கூடாது என்று அறிவுறுத்தல் அளிக்கப்பட்டிருந்தும்கூட இதுபோல செய்தால் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டிவரும் என்று சபாநாயகர் எச்சரித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திரினமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி, "நீங்கள் மோடிக்கு மட்டும் சபாநாயகர் கிடையாது" என கூறிவிட்டு மேலும் சில ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று எதிர் கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எதிர்ப்பு வலுத்ததையடுத்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார் கல்யான் பானர்ஜி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications