சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு நிறுத்தி வைப்பு: அமைச்சர் நட்டா
டெல்லி: சிகரெட்டுகளை சில்லறையாக விற்பனை செய்ய தடை விதிக்கும் முடிவை மத்திய அரசு நிறுத்தி வைக்க உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
சிகரெட்டுகளை சில்லறை முறையில் விற்பனை செய்ய தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து சிகரெட், புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு தீர்மானித்தது. இந்நிலையில் இது பற்றி கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புகையிலை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.

சிகரெட் சில்லறை விற்பனை தடை செய்யப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்று விவசாயிகள் வெங்கையா நாயுடுவிடம் தெரிவித்தனர். விவசாயிகளின் கருத்தை கேட்ட பிறகு அவர் டெல்லியில் இது குறித்து அமைச்சர்கள், எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் சிகரெட்டுகளை சில்லறையாக விற்பனை செய்ய தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறுகையில்,
சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு பற்றி அனைத்து தரப்பினருடனும் கலந்தாலேசிக்கப்படும். அதுவரை சிகரெட்டுகளை சில்லறையாக விற்பனை செய்ய தடை விதிக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications