என் பொண்ணை விட்ரு.. அவளுக்கு நிச்சயமாய்ருச்சு.. கோபமடைந்த இளைஞர்.. மேரிக்குட்டி பரிதாப பலி!
பெண்ணை கொலை செய்த மதுரை இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

கொல்லம்: "என் பொண்ணை விட்டுடு.. அவளுக்கு வேற இடத்தில் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கேன்" என்று சொன்னதும், ஆத்திரத்தில் மேரிகுட்டியை கொலை செய்த மதுரை இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் குளத்துப்புழா என்ற இடத்தைச் சேர்ந்த தம்பதி வர்கீஸ் - மேரிக்குட்டி. வர்கிஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் பெயர் லிசா. மும்பையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், லிசாவுக்கு சதீஷ் என்ற இளைஞர் ஃபேஸ்புக்கில் அறிமுகமானார். அந்த நட்பு காதலாக மாறியது. ஃபேஸ்புக் லவ் ரொம்ப தீவிரமாக போய் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று லிசாவுக்கு வீட்டில் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்கள்.

கொரியர் - சதீஷ்
இதனால் லிசா, சதீஷூடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டார். இதனால் சதீஷ் மிகவும் கவலையும், குழப்பமும் அடைந்தார். எனவே நேற்று முன்தினம் மதுரையில் இருந்து கிளம்பி சதீஷ் நேராக ஒரு காரை வாடகைக்கு பிடித்து கொண்டு குளத்துப்புழாவுக்கே வந்துவிட்டார். லிசா வீட்டிற்கு வந்து "கொரியர்" என்று சத்தம் போட்டார்.

மகளை விட்டுடு
அப்போது லிசாவின் அம்மா மேரிக்குட்டிதான் கதவை திறந்தார். அவரை பார்த்ததும் சதீஷ், லிசாவை காதலிப்பதாகவும் அவளை தனக்கு கல்யாணம் பண்ணி தருமாறும் கேட்டார். இதைக் கேட்டு நானும் மேரிக்குட்டி ஷாக் ஆகி நின்றார். பின்னர் சுதாரித்து கொண்டு, தன் மகளை விட்டுவிடு... அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்திருக்கிறோம் என்றார்.

சரமாரியாக குத்தினார்
ஆனால் சதீஷ் விடவே இல்லை.. தொடர்ந்து லிசாவை கல்யாணம் செய்து தருமாறு கேட்டு கொண்டே இருக்க.. மேரிக்குட்டி மறுப்பு சொல்லி கொண்டே இருந்தார். பிறகு ஆத்திரமடைந்த சதீஷ், தன்னிடமிருந்த கத்தியை எடுத்து மேரிகுட்டியை சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த மேரிக்குட்டி வலியால் அலறி துடித்து வீட்டுக்கு வெளியே வந்து சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

சதீஷ் கைது
அப்போது ரத்தவெள்ளத்தில் மேரிக்குட்டி துடித்து கொண்டிருக்க, கையில் கத்தியுடன் பக்கத்தில் சதீஷ் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து சதீஷை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் மேரிக்குட்டியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மேரிக்குட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது கொல்லம் போலீசார் சதீஷ் உட்பட கார் டிரைவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications