மண்டைக்கேறிய சூதாட்ட போதை.. அடமானம் வைக்கப்பட்ட மனைவி.. எல்லைமீறிய கணவரின் நண்பர்.. கொடுமையா இருக்கு
கான்பூர்: புராணங்களிலும், இதிகாசங்களிலும் நடந்த சம்பவமெல்லாம், நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.. கட்டிய கணவனுக்கு விஷம் வைத்து கொல்லும் பெண்கள், அதிகமாகவே கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. உயிருக்கு உயிராகும் நேசிக்கும் காதலனை, கூலிப்படை வைத்தே இளம்பெண்கள் கொலை செய்கின்றனர்.. இதுபோன்ற கொடுமை பெண் குழந்தைகளுக்கும், அப்பாவி மனைவிகளுக்கும் நடந்து வருகிறது.. சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவ அதிர்ச்சி அடங்காத நிலையில், மத்திய பிரதேசத்தில் மற்றொரு கொடுமை நடந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நகரில் வசித்து வரும் இளம்தம்பதிக்குள் இப்படியொரு சம்பவம் நடந்தது. சூதாட்டத்துக்கு அடிமையான கணவர், எதையும் வைத்து விளையாடக்கூடியவர்.. சூதாட்டத்தின்போது சுமார் 7 ஏக்கர் நிலத்தை வைத்து இழந்துவிட்டார். பிறகு மனைவியின் நகைகளையும் சூதாட்டத்தில் வைத்து இழந்துவிட்டார்.

தண்ணீர்கூட தரவில்லை
ஒருகட்டத்தில் தன்னுடைய மனைவியை அடமானம் வைத்தும் சூதாடிவிட்டார். சூதாட்டத்தில் மனைவியை வைத்து விளையாடி தோற்றும் போய்விட்டார். இதனால், தன்னுடைய மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும், நண்பர்களை அந்த கணவர் அனுமதித்துள்ளார். அப்போது தாகத்துக்கு தண்ணீர்கூட தராமல் அப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்களை செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மனைவியின் கை விரலையும் உடைத்து கணவன் சித்ரவதை செய்தார்.. இறுதியில் அப்பெண் அங்கிருந்து தப்பிச்சென்று "112 பெண்கள் உதவி" எண்ணுக்கு போன் செய்துள்ளார்.. அதற்கு பிறகே போலீசில் புகார் தரப்பட்டது..
தனக்கு நடந்த வன்கொடுமைகளை, நீதிமன்றத்தில் மட்டுமே சொல்வேன் என்று அந்த பெண் ஆவேசமாகவும் கூறியிருந்தார்.. மிகப்பெரிய அதிர்வலையை அப்போது ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவம் குறித்த விசாரணையும் தற்போது நடந்து வருகிறது.
சூதாடிய கணவர்
இந்நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடந்துள்ளது... இங்குள்ள கிராமத்தை சேர்ந்த நடுத்தர வயதுக்காரர், சூதாட்டத்துக்கு அடிமையானவர். சூதாடியதால், ரூ.50 ஆயிரம் வரை கடனுக்கும் ஆளாகியிருக்கிறார்..
இந்த கடனை அவர் தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் வாங்கியிருந்தார்.. ஆனால், அந்த கடனையும் அடைக்க முடியவில்லை.. ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர துவங்கினார்கள்.. இதனால் கடனை அடைப்பதற்காக நண்பர் ஒருவருக்கு, தன்னுடைய மனைவியை விற்றுவிட்டார்.
பாலியல் அடிமை
உடனே அந்த நண்பரும், பாலியல் அடிமையாக நினைத்து, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்... நாளுக்கு நாள் அவரது கொடுமை தாங்க முடியாத அந்த பெண், அங்கிருந்து தப்பி இந்தூர் மகளிர் போலீசுக்கு ஓடினார்.. கணவர் மீதும், கணவரின் நண்பர் மீதும் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் Zero FIR அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதனை தார் போலீஸ் நிலையத்துக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அதற்குள் பெண்ணின் கணவரும், பாலியல் பலாத்காரம் செய்த நண்பரும் தலைமறைவாகிவிட்டனர்... இவர்கள் இருவரையும் தார் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications